164
வேர்ச்சொற் கட்டுரைகள்
2. ஆராய்தல். “தெள்ளி யறிந்த விடத்தும்” (நாலடி. 380). 3. நீர் தெளிதல். “தெள்ளுநீர்க் காவிரி" (மணிமே. 22 :40). 4. அறிவு தெளிதல். “புள்ளுணர் முதுமகன் தெள்ளிதிற் றேறி” (பெருங். 56 : 7). 5. விளங்குதல். “தெள்ளுங் கழலுக்கே” (திருவாச. 10 : 19).
=
தெள்ளிமை = 1. தெளிவு. 2. அறிவுநுட்பம். "சொன்ன தென்ன தெள்ளிமையோ” (விறலிவிடு.).
தெண்மை = 1. தெளிவு. 2. அறிவின் தெளிவு. “தெண்மை யுடையார்” (பு.வெ. 8 : 12, உரை).
தெள்ளியர் = தெளிந்த அறிவினர். “தெள்ளிய ராதலும் வேறு”
(குறள்.374)
தெள்விளி = 1. தெளிந்த இசை. "கோவல ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற” (குறிஞ்சிப். 222). 2. தெளிந்த சொல். “வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடை பயிற்றி” (குறிஞ்சிப். 100).
தெள்- தெள்கு. தெள்குதல் = தெளிவாதல்.
தெள் - தெட்பு = தெளிவு. தெட்பு - தெட்பம் = 1. தெளிவு. 2. தேற்றம், திடம். “சயந்த னங்க ணிருந்தனன் றெட்ப மெய்தி” (கந்தபு. இந்திரன் கரந். 37). 3. மூதறிவு (திவா.). 4. முதிர்ச்சி.
தெட்ட = 1. தெளிவான. "மால்கரி தெட்ட மதப்பசை கட்டின” (கம்பரா. சரபங்க. 8). 2. முற்றிய. “தெட்ட பழஞ்சிதைந்து” (திவ். பெரியதி. 3: 4 : 8).
தெட்டவர் = தெளிந்த அறிவினர். “பரம ஞானம்போய்த் தெட்டவ ரல்லரேல்” (கம்பரா. மந்திர. 20).
தெள் - தெளி = 1. ஒளி. “தெளிவளர் வான்சிலை” (திருக்கோ. 16, உரை). 2. தெளிவு. 'தெளிகொண்ட வெங்கள்” (பு. வெ. 1 : 15). 3. தெளிந்த சாறு. “கரும்பின் றெளி” (தேவா. 280: 5).
தெளிதல் = செ. குன்றிய வி. - 1. ஒளிர்தல். 2. வெண்மையாதல். 3. அமைதியுறுதல். "தெளியா நோக்க முள்ளினை” (அகம். 33). 4. தெளிவாதல். 5. ஐயம் நீங்குதல். 6. முடிவிற்கு வருதல். 7. நோய் நீங்குதல். நோய் தெளிந்துவிட்டது. (உ. வ.). 8. ஆள் செழிம்பாதல். ஆள் இன்று நன்றாய்த் தெளிந்துவிட்டான். (உ. வ.). 9. பஞ்சம் நீங்குதல். பஞ்சந் தெளிந்தது. (உ.வ.).
செ.குன்றா வி.-1. ஆராய்தல். 2. தெளிவாக அறிதல். "பிரியலேந் தெளிமே ’” (குறுந். 273). 3. நம்புதல். "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்” (குறள். 510).