உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துல்* (தெளிவுக் கருத்துவேர்)

=

167

தேறல் = 1. தெளிவு (பிங்.). 2. தெளிந்த கள். "தேக்கட் டேறல்” (புறம். 115). 3. தேன். "மலர்த்தேற லூறலின்” (தேவா. 9413). 4. தெளிந்த சாறு. “ஆனெயைக் கரும்பினின் றேறலை” (திருவாச. 5 : 38). ம. தேறல், தெ. தேர.

5:

தேறு - தேற்று = 1. தெளிவிக்கை. 2. தெளிவு. “சொற்பொருளின் தேனே” (சிவப். நால்வர். 28). 3. தேற்றாங்கொட்டை. “தேற்றின்கலங்குநீர் தெளிவ தென்ன” (ஞானவா.).

தேற்று - தேற்றம் = 1. தெளிவு. “தேற்றச்சொற் றேர்வு” (நாலடி. 259). 2. உறுதி. “தேற்றம் வினாவே” (தொல். சொல். 259). 3. மனங் கலங்காமை. "தேற்ற மவாவின்மை” (குறள். 513). 4. ஆறுதல். 5. செழிம்பு. 6. சூளுறவு. “தீராத் தேற்றம்” (தொல். பொருள் 102).

ம. தேற்றம், தெ. தேட்ட, க. தேட்டெ.

தேற்றம்- தேற்றன்= மெய்யறிவன். “தேற்றனே தேற்றத் தெளிவே” (திருவாச. 1:82).

தேற்று - தேற்றரவு = 1. தேற்றம். 2. ஆறுதல்.

தேற்றரவாளன் = 1. திடநெஞ்சன். 2. ஆறுதல் சொல்வோன். 3. தூய ஆவி (கிறித்தவ வழக்கு).

தேற்றரவாளி = தேற்றரவாளன்.

தேற்று - தேற்றா = 1. தேற்றாமரம். 2. தேற்றாங்கொட்டை. ம.தேற்றா.

தேற்றா- தேற்றான் (தைலவ. தைல.).

தெள் - தெடு. தெடுதெடுவெனல் = (தெளிந்து)\. நீர்ப்பதமா யிருத்தல் (நெ.வ.).

தெடு - தெடாரி = தெளிந்த கண்ணையுடைய பறைவகை.

“கடாஅ யானைக் கால்வழி யன்னவென்

தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றி" (புறம்.368).

தெடாரி- தடாரி.

6

“சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி

யூன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி”

(புறம்.381).