உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒ.நோ : குட்டி = சிறுபெண், E. girl, female child.

M.E. gurle, girle, gerle, perh. cogn. with LG. gor. child. - C.O.D.

குருமன் = ஒருசார் விலங்கின் இளமைப் பெயர்.

குருமன் - குருமான். 'குட்டிகுருமான்' என்பது உலக வழக்கு.

குரு - கரு = 1. சூல். "மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்” (புறம். 34). 2. முட்டை. 3. முட்டைக்கரு. "புறவுக்கரு வன்ன புன்புல வரசின்” (புறம். 34). 4. பிறப்பு. "கருவைத்துடைப்ப”(பிரபுலிங். கொக்கி. 15). 5. உடம்பு. “கருவுள் வீற்றிருந்து” (திவ். திருவாய். 5 : 10 : 8). 6. குழந்தை. “சோரர்தங் கருவைத் தங்கள்கருவெனத் தோளி லேந்தி” (பாரத. நிரை. 116). 7. குட்டி. “காசறைக் கருவும்” (சிலப். 25 : 52). 8. வினைமுதற் : கரணியம் (நிமித்த காரணம்). “கருவாயுலகினுக்கு” (திருவாச. 10: 14). 9. அச்சுக்கரு. “திருவுருவினைக் கருவினாற் கண்டு” (திருவிளை. இரச. 9.). 10. நடு. "உள்ளூர்க் கருவெலா முடல்" (கம்பரா. கிங்கரர். 44). 11. உட் பொருள். 12. அடிப்படை. “கருவோடிவரடி.... காணாமையின்” (இரகு. நகரப். 20). 13. நுண்ணணு. “கருவளர் வானத்து” (பரிபா. 2 : 5). 14. கருப்பொருள் “தெய்வ முணாவே.... கருவென மொழிப” (தொல். அகத். 18).

ம., க. கரு.

கரு = நடு. ஒ. நோ: ME., E. core.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, கரு என்னும் தூய தென்சொல்லைக் கருப்பம் (garbha) என்னும் வடசொல் லினின்று திரித்துள்ளது. வடசொல்லே தென்சொல்லினின்று தோன்றியிருத்தல் வேண்டும்.

குள் - குட்டு- குட்டம் = குரங்குக்குட்டி.

"தங்குட்டங்களை..... மந்திகள் கண்வளர்த்தும்”

க., மராத். குட்ட (gudda)

(திவ். பெரியாழ். 3: 5 : 7).

குட்டம் - குட்டன் = 1. சிறுபிள்ளை. “என் சிறுக்குட்டன்” (திவ். பெரியாழ். 1 : 4 : 9). 2. இளமகள். “குயிலெனப் பேசுமெங் குட்டனெங் குற்றது” (திருக்கோ. 224). 3. ஆட்டுக்குட்டி (திவா.).

ம. குட்டன், க.குட்ட (gudda).

=

குட்டு - குட்டி குட்டி = 1. நாய், பன்றி, புலி, முயல், நரி ஆகியவற்றின் குட்டி (தொல். மரபு. 10). 2. ஆட்டுக்குட்டி. 3. சிறுமி (உ.வ.). 4. கடைசிப் பிள்ளையின் பொதுப் பெயர். கடைக்குட்டி (உ.வ.).