உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல்* (வளைதற் கருத்துவேர்)

43

10. குடியிருப்போர். 11. வதிதல் அல்லது தங்குதல். “என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே” (தாயுமா. தேசோமயானந்தம்). குடியானவன் நிலையாக ஓரிடத்தில் வதியும் உழவன் அல்லது வேளாளன். குடியிருத்தல் வீட்டிலிருத்தல், நிலையாக வதிதல்,

=

=

குடிபுகுதல், குடிவருதல், குடிபோதல், குடியேறுதல், குடி கொள்ளுதல் முதலிய தூய தமிழ் வழக்குகளை நோக்குக.

குடி (குடிசை, வீடு) - ம. குடி, வ.குட்டி (kuti).

OE. cot, MDu., MLG., ON, kot, E. cot.

OE. cote, MLG. kote; R. cote.

=

குடிகை (குடி + கை) = 1. சிறுவீடு (குடிசை). 'உண்டுகண் படுக்கு முறையுட் குடிகையும்” (மணிமே. 6 : 63). 2. சிறு கோயில். “குச்சரக் குடிகைக் குமரியை மரீஇ" (மணிமே. 18:152). கை என்பது ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டு (Dimunitive suffix).

ஒ. நோ : கன்னி- கன்னிகை. குடிகை- வ. குட்டிகா.

குடிகை- குடிசை = குடில். தெ. குடிசெ(g).

குடிசை - குடிஞை = குடில். "தூசக் குடிஞையும்” (பெருங். லாவாண. 12 : 43).

குடில் (குடி + இல்) = 1. ஆட்டுக்குட்டிகளை அடைக்குங் கூடு. 2. குடிசை. “என்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில்”. (பாரத. உத்தி. கிருட். 80). இல் என்பதும் ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டாம்.

(திவா.)

ஒ.நோ: தொட்டி- தொட்டில், புட்டி - புட்டில்.

குடில் - குழலம்- வ. குட்டீர.

=

குடி- குடில் = வட்டவடிவாகத் தோன்றும் காயம் (ஆகாயம்) -

குடில் - குடிலம் = 1. வளைவு.

'கூசும் நுதலும் புருவமுமே குடிலமாகி யிருப்பாரை” (யாப். வி. மேற்கோள்). 2. காயம் - ஆகாயம்) (LIT.).

குடில்

=

குடிலை 1. மூல மந்திரமாகிய ஓங்காரம். "குடிலையம் பொருட்கு” (கந்தபு. கடவுள்வா. 14). 2. தூயமாயை. (சி. போ. LIT. 2:2).

குண்டலி, குடிலை என்னும் மெய்ப்பொருளியற் சொற்கட்கு வடமொழியில் வேறு மூலமில்லை.