உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

குல்= (வளைதற் கருத்துவேர்)

கொள்கு

கொட்கு. கொட்டுதல்

=

47

கொள் 1. சுழலுதல். 'வளிவலங் கொட்கு மாதிரம்” (மணிமே. 12 : 91). 2. சூழவருதல். 'காலுண வாகச் சுடரொடு கொட்கும்” (புறம். 43 :3). 3. திரிதல். “கொடும்புலி கொட்கும் வழி” (சிறுபஞ். 80). ஒ. நோ: வெள்- வெள்கு- வெட்கு.

கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை வகை. "பைங்காற் கொக்கின்” (புறம்.342). ஒ. நோ : சுள்- சுள்கு- சுட்கு- சுக்கு. ம. கொக்கு, தெ. கொக்கெர, க. கொக்கரெ, து. கொர்ங்கு, பிரா. கொக்கை.

கொக்கு- கொக்கி = 1. வளைந்த கொளுவி. 2. இருப்புத்துறட்டி. ம. கொக்க, தெ. கொக்கி, க., து. கொக்கெ, Du. hock, MLG. hok, OE. hoc, E.hook. கொக்கி- கொக்கில் = அணிகலக் கொக்கிவாய். கொக்கு- கொக்கை கொக்கி (யாழ்ப்).

=

கொக்கு- கொக்கரை = 1. வளைவு. 2. வைக்கோல் வாருங் கருவி (rake). 3. வில் (அக. நி.). 4. வலம்புரிச்சங்கு (திவா.). 5. வட்ட மானதாளக் கருவி. 6. வளைந்து சூழும் வலை. 7. வளைந்து வளைந்து செல்லும் பாம்பு. ம. கொக்கர, தெ. கொக்கெர, க. கொக்கெ.

கொக்கு - கொக்கட்டி = குறுகி வளைந்த பனங்கிழங்கு (யாழ்ப்.). கொள்- கொண்டி = கொக்கி, கொளுவி.

கொள்- (கொண்) - கொடு- கொடுமை = 1. வளைவு (சிலப். 11: 20)). 2. மனக்கோட்டம். “கொடுமையுஞ் செம்மையும்” (பரிபா. 4 : 50). 3. தீமை. 'கூனுஞ் சிறிய கோத்தாயுங் கொடுமை யிழைப்ப” (கம்பரா. மந்திரப். 1). 4. முறைகேடு. “கொடியோர் கொடுமை” (தொல். பொருள். 147). 5. தீவினை. 5. கொடும்பாடு. 'கொடுமைபல செய்தன" (தேவா. 945 : 1). ம. கொடும்.

=

கொடுவாள் = வளைந்த வெட்டறுவாள். கொடுமரம் வில். கொடுங்கை = 1. மடித்த கை. 2. கட்டடத்தின் வெளிப்புறம் நீண்டு வளைந்துள்ள உறுப்பு. “மரகதக் கொடுங்கை சுற்றமைய வைத்தனன்” (தணிகைப்பு. வள். 12).

கொடுக்காய்ப்புளி = பன்மடி வளைந்த காயுள்ள மரவகை.