உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

குல்= (வளைதற் கருத்துவேர்)

51

கோண் - கோணை = 1. வளைவு. 2. கோணல். கோணையன் =

இயற்கைக்கு மாறான குணமுடையவன்.

கோண்- கோடு. ஒ. நோ : பாண்- பாடு.

கோடுதல்

= 1. வளைதல். 'கொடும்புருவங் கோடா மறைப்பின்" (குறள். 1086), "கோல் கோடி” (குறள். 554). 2. நெறிதவறுதல். "கோடாருங் கோடி" (நாலடி. 124). 3. நடுநிலை தவறுதல். “கோடாமை சான்றோர்க் கணி” (குறள். 118).

கோடு = 1. வளைவு 2. விலங்குக் கொம்பு. 'கோட்டுமண் கொண்டிடந்து” (திவ். பெரியாழ். 3 : 3 : 9). 3. யானை மருப்பு. “களிறு.....நுதிமழுங்கிய வெண்கோட்டால்” (புறம். 4 : 11). 4. யாழ்த் தண்டு. "யாழ்கோடு செவ்விது” (குறள். 279). 5. பிறைமதி. "கோடு மிலைந்தான்” (திருக்கோ. 149). 6. சங்கு. 'கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும்" (பதிற். 50 : 25). 7. குளக்கரை. “குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று” (குறள். 523). 8. எழுத்தின் வரிவடிவுக் கொம்பு. "கோடு பெற்றும் புள்ளி பெற்றும்” (தொல். எழுத்து. 17, நச். உரை). 9. நடுநிலையின்மை. “கோடிறிக் கூற்றம்” (நாலடி. 5). 10. கால வட்டம். "கலியுகக் கோட்டு நாள்”(T. A. S. H. O. P. S). தெ.,க.கோடு.

6

கோடு - கோட்டம் = 1. வளைவு. "மரத்தின் கனக்கோட்டம் தீர்க்குநூல்” (நன். 25). 2. கோணல் “உட்கோட்ட மின்மை பெறின்” (குறள். 119). 3. வட்டமான ஆன்கொட்டில். “ஆனிரைக டுன்னுங் கோட்டம்” (வாயுசங். பஞ்சாக். 58). 4. மதில் சூழ்ந்த கோயில். “கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்” (சிலப். 14: 10). 5. மதில் சூழ்ந்த சிறைச்சாலை. “ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம்” (மணிமே. 19 : 43). 6. குளக்கரை. “உயர்கோட்டத்து.... வான் பொய்கை” (பட்டினப். 36). 7. மண்டலம், (LBI.). 8. வணக்கம். "முன்னோன் கழற்கே கோட்டந்தருநங் குருமுடி வெற்பன்” (திருக்கோ. 156). 9. நடுவுநிலையின்மை. “கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது" (தேவா. 1182 : 2).

வட்டம்,

நாடு

கோட்டம் கோட்டகம்

=

குளக்கரை.

கோட்டகம்” (சிலப். 11 : 71).

'நெடுங்குளக்

கோடு-கோடி = 1. வளைவு. 'முளைத்திங்கட் கோடியென" (திருவாரூ.134). 2. முடிமாலை (பிங்.).

=

கோடு-கோடல் = 1. வளைவு. 2. முறிக்கை. 3. வெண்காந்தள். "கோடல் முகையோடு " (பு. வெ.8:16).

கோடலம் = பிறைபோல் வளைந்த மாலைவகை. கோடு- கோடை வளைந்த இதழுள்ள காந்தள்.