3
குல் (குத்தற் கருத்துவேர்)
57
தாண்டிக்கடத்தல், 7. கடந்து வெல்லுதல். “கூற்றங் குதித்தலும் கைகூடும்” (குறள். 269). குதியாளம் = குதித்து விளையாடுதல்.
=
ம.குதி, க.குதி (gudi).
குதி - கூத்து. இனி,குத்து (குதி)- கூத்து என்றுமாம்.
ம., க. கூத்து.
குதி- கொதி. கொதித்தல் = 1. நீர் நெய் முதலியன பொங்கி யெழுதல் “குண்டிகை யிருந்த நீருங்... கொதித்த தன்றே” (கம்பரா. வருணனை. 61). 2. மிகச் சுடுதல். 3. சினம் பொங்குதல்.
குதி - குதிரை = குதித்துத் தாண்டும் விலங்கினம்.
ம.குதிர, தெ. குதிர, க., து. குதுரெ.
குதி- குதிர். குதிர்தல் = படிதல், குடியமர்தல், ஒழுங்காதல்.
தெ., க. குதுரு.
=
குதிர்- கதிர் = 1. நேராகச் செல்லும் ஒளியிழை. “விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி” (சிலப். 11 : 43). 2. கதிர்வீசும் இரு விண்சுடர். “கதிர் விலகிச் சூழும்” (சேதுபு. முத்தீர். 5). 3 குறட்டி னின்று (குடத்தினின்று) கதிர்போற் செல்லும் ஆரக்கால். 4, ஒளிக் கதிரும் ஆரக்காலும் போல் நெடுகக் கிளைக்கும் பயிர்க்கதிர். 5. நேராக நூல்நூற்குங் கருவி. “கதிரே மதியாக” (நன். 24) ம., க. கதிர், தெ. கதுரு (நூற்கதிர்). கதிர்த்தல் = 1. விளங்குதல், ஒளிவீசுதல். “கதிர்த்த நகை மன்னும்” (திருக்கோ. 396). 2. வெளிப்படுதல். “வாய்மை கதிர்ப்பச் சென்ற” (கம்பரந். 1). 3. மிகுதல். “கதிர்த்த கற்பினார்”.
குதி-குதை
குதி - குதை = கதிங்கால் போன்ற வில்லின் அடி. "குதைவரிச் சிலைநுதல்” (கம்பரா. பால. நகர. 49). ம. குத.
குதைத்தல் = விற்குதையில் நாண் பூணுதல். “குதைக்கின்றன நிமிர் வெஞ்சிலை” (கம்பரா. உயுத். இராவணன் வ. 46).
குத்து -குத்தி- கத்தி = குத்தி வெட்டும் அல்லது அறுக்குங் கருவி. குத்து - கத்து = குத்திவெட்டு (இறந்துபட்ட வழக்கு). தத்து - கத்தி. ம.,தெ.க.,து. கத்தி.
ஒ.நோ : ME. cutte, kitte, kette, Sw. kata (kuta), E. cut, இந்தி, காட் (வெட்டு).
குத்துக்கோடரி = குத்திவெட்டுங் கோடரி.
கத்தி + அரி = கத்தரி. கத்தரித்தல் = 1. சிறிது சிறிதாய் (கொஞ்சங் கொஞ்சமாய்) வெட்டியறுத்தல் (திவா.). 2. அறுத்தல். 'தலைபத்துங்