உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

வேர்ச்சொற் கட்டுரைகள்

குத்து (கைப்பிடியளவு, திரட்சி)- கொத்து = 1. கைப்பிடியளவு. “ஒரு கொத்துச் சோறு கொடு” (உ. வ.). 2. பிடிசோறு, சோறு. “அரும்புக்கும் கொத்துக்கும்

வந்தார்.

(தனிப்பா.

காளமே).

3. சோற்றிற் கீடாகத் தவசமாகக் கொடுக்குங் கூலி. 4. திரட்சி. 5. பூ காய் முதலியவற்றின் குலை. "கொத்துறு போது மிலைந்து" (திருவாச. 6: 30). 6. குடும்பம். "கொத்தடிமை” (உ.வ.) 7. மக்கள் திரள். “அனைத்துக் கொத்துப் பரிஜனங்களும் (குருபரம்).

கொத்து- கொந்து = 1. திரள். "கொந்தினாற் பொலியும் வீF” வீதி (இரகு. இரகுவு. 53). 2. பூங்கொத்து. "கொந்தா ரிளவேனல்" (சிலப். 8, வெண்பா. 1). 3. கொத்துமாலை. “கொந்தார்தடந்தோள்’” (திருக்கோ. 391). குட்டு கொட்டு. கொட்டுதல் = 1. குளவி தேள் முதலியன கொட்டுதல். “கருங்குளவி கொட்டும்” (அரிச். பு. நகர்நீங். 41). 2. கம்மியர் சம்மட்டியால் அடித்தல். “கொட்டுவினைக் கொட்டிலும்” (பெருங். மகத. 4:16). 3. நெற்குத்துதல். 'கொட்டி வீழுமி குத்தல்போல்" (பிரபுலிங். சித்தரா. 9). 4. தோள் புடைத்தல். “கொட்டி னான்றோள்” (கம்பரா. சம்புமா. 18). 5. அடித்தல். 6. மேளம் அடித்தல். “மத்தளங் கொட்ட” (திவ். நாய்ச். 6 : 6).

-

கொட்டு = பறைப்பொது. கொட்டாட்டுப் பாட்டு கொட்டும் ஆட்டும் பாட்டும்.

குத்து- குற்று. குற்றுதல் = நெல் முதலியன குத்துதல். “வெதிர்நெற் குறுவாம்” (கலித். 42).

குள் - குறு. குறுதல் = 1. கிள்ளிப் பறித்தல். “பூக்குற் றெய்திய புனலணியூரன்” (ஐங். 23) 2. ஒழித்தல். “இச்சைமற் றாச்சிரயங் குற்றோன்” (ஞான. 61 : 19).

ஒ.நோ: வெள் - வெறு. வெள்ளிலை- வெற்றிலை.

குறுகுறுத்தல் = மனஞ்சான்று குத்துதல். "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” (பழமொழி.)

குறு (குறள்)- குறண்டு. குறண்டுதல் = 1. முட்போற் குத்துதல். 2. குத்தி வறண்டுதல்.

குறண்டு - குறண்டி = 1. முட்செடி வகை. 2. தூண்டில் முள்.

குறண்டு- கறண்டு. கறண்டுதல் = வறண்டுதல். (பாதாள)க் கறண்டி

= (பாதாள) வறண்டி.