72
வேர்ச்சொற் கட்டுரைகள்
குழை - குகை = 1. மலைக்குகை (பிங்.). 2. மாழைகளை உ ருக்குங்
கலம். "கருமருவு குகையனைய காயத்தி னடுவுள்” (தாயு. 32). ஒ.நோ : முழை - முகை - குகை.
=
குகை - வ. குஹா(g).
-
குகை குவை
=
பொன்னுருக்குங் கலம். "இருந்தைக் குவை
யொத்தன” (தணிகைப்பு. திருநாட்டுப். 63).
குவை- ம. குவ, வ. குஹா (g) E. cabe, L. caba.
குழை - குழாய் = 1. துளை. 2. துளையுடைப்பொருள் (பிங்).
ஒ.நோ : கழை -கழாய்.
பால.
குழை- குடை. குடைதல் = 1. கிண்டுதல். "குடைந்து வண்டுண்ணுந் துழாய் முடியானை” (திவ். திருவாய். 1: 7: 11). 2. கடைதல். “நெய்குடை தயிரின்” (பரிபா. 16 : 3). 3. துளைத்தல். 4. நீரில் மூழ்குதல். "குடைந்து நீராடு மாதர்” (கம்பரா. நீர்வி. 12). 5. துருவுதல். 6. நாடு துருவுதல். "குடைந்துல கனைத்தையும் நாடும்” (கம்பரா. சுந்தர. உருக். 23). 7. கடுமையாய் வினவி வருத்துதல். 8. குடைந்தாற்போல் நோவெடுத்தல். ஒ.நோ : புழை - புடை. கடை- கடலை = வறுத்துக் கடைந்த பயறு.
குளி- குடி குடித்தல் = நீரை உட்புகுத்துதல். ஒ.நோ : முழுகு - முழுங்கு-விழுங்கு . ள-ட.ஒ.நோ : களிறு- கடிறு, கெளிறு-கெடிறு.
.
குள் - குண்டு = 1. பள்ளம். 2. கிடங்கு. 3. நீர்க்கிடங்கு. 4. சிறு நன்செய். 5. ஆழம் "வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி” (மணிமே. 8: 8). ம. குண்டு . குண்டுங்குழியும் என்னும் வழக்கை நோக்குக. குண்டு குண்டில் = சிறுசெய் (திவா.).
குண்டு
—
குண்டம் = 1. பள்ளம். 2. குழி. 3. பானை (பிங்.). 4. சிறுகுளம் (திவா.). 5. வேள்விப் பள்ளம் (ஓமகுண்டம்). “மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப” (கல்லா. 94 : 12).
ம. குண்டம், வ. குண்ட.
குள்-குண் - குணம் = கடலாற் பள்ளமான கிழக்கு. குணம் – - குணக்கு = கிழக்கு.
குண்டு - குட்டு - குட்டம் = 1. மடு. "நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து” (புறம். 243:9). 2. ஆழம். "இருமுந்நீர்க் குட்டமும்” (புறம். 20:1).3. ஏரி. 4. குட்டநாடு. "தென்பாண்டி குட்டம்” (நன். 272, மயிலை.). குட்டநாடு = சேரநாட்டைச் சேர்ந்ததும், கோட்டையும்