உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

குல் (துளைத்தற் கருத்துவேர்)

75

கிடங்கு – கிடங்கர் = 1. அகழி. 2. கடல். “திரைக் கிடங்கர்சூழ் குவலயப் பரப்பில்” (உபதேசகா. விபூதி. 35).

கீள் - கீறு. கீறுதல்

=

1. கிழித்தல் (திவா.) 2. பறண்டுதல்.

3. அறுத்தல், “புண்கீறிய குருதிப்புனல்” (கம்பரா. பால. பரசுராமப். 9). 4. வகிர்தல். 5. கோடுகிழித்தல். 6. கீறியெழுதுதல் (பிங்.).

கீறு - கீறல் = 1. கிழிகை. 2. தற்குறி.

கீறு - கீற்று = 1. சில், துண்டு. 2. கூரைவேயுங் கிடுகு.

கிள்- கிறு- கிறாம்பு. கிறாம்புதல்- மெல்லச் செதுக்குதல். கீறு– ம. கீறு, கீறு (கோடுAN)- ௧. கீறு (g), தெ. கீயு (g). கீறு (AN) - க. கீறு, தெ. கீறு (g).

6

குள்- கொள்- கொழுது. கொழுதுதல் = குடைதல். “நறுந்தாது கொழுதும் பொழுதும்” (குறுந். 192:5).

6

கொழுது- கோது. கோதுதல் = 1. இறகு பூந்தாது முதலிய வற்றைக் குடைதல். "மயில்கோது கயிலாயம்" (தேவா. 1157 6). 2. மயிர்ச்சிக் கெடுத்தல். "கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற... குழலி” (பெருந்தொ. 1323). 3. சிதறுதல். “கோதிக் குழம்பலைக் குங்கும்பத்தை” (நாலடி. 47). 4. ஓலைவாருதல்.

குள்- குய்- குயில். குயிலுதல் = 1. துளைத்தல். "குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில்" (நெடுநல். 88). 2. மணி பதித்தல். “சுடர்மணியின் பத்தி குயின்றிட்ட பழுப்பேணியில்” (கந்தபு. வள்ளி. 50). குயில் = துளை (பிங்.).

குள்- (குர்) - குரு- கோர். கோர்த்தல் = நூலை அல்லது நாணைத் துளைவழி துருவச் செய்தல். ம. கோர்.

கோர்- கோர்வை = கோர்க்கை, மாலை, தொடர். ம. கோர்வ. கோர் கோ-கோவை.

=

கோத்தல் 1. மணியூடு நூலைத் துருவச் செய்தல். “கோத்தணிந்த வெற்புமணி” (பெரியபு. மானக்கஞ். 22). 2. ஒழுங்காக அமைத்தல். “பார்த்தவிட மெங்கணுங் கோத்தநிலை குலையாது” (தாயு. கருணாகர. 4). 3. முறைப்படச் சொல்லுதல். ‘பூமியாண் முறையுங் கோத்தார்” (பாரத. சம்பவ. 113). 4. திரட்டிச் சொல்லுதல். "கோமின்துழாய்முடி யாதி யஞ்சோதி குணங்களே” (திவ். திருவாய். 4: 1 : 7). 5. கதைபுனைதல். 6. கைபிணைத்தல். "குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும்” (திவ். திருவாய். 6 : 4 : 1). 7. ஒன்று சேர்த்தல். “அன்பரைக் கோத்தற விழுங்கிக் கொண்டு' (தாயு பொருள்வ. 3).

.