சுல்' (குத்தற் கருத்துவேர்)
சுணை (கூர்மை) - ம. சுண.
சுணைகெட்டவன்
கெட்டவன்.
83
மானவுணர்ச்சியில்லாதவன். ம. சுண
சுணைப்பு = மானவுணர்ச்சி. “ஒருதரஞ் சொன்னால் தெரியாதா? உனக்குச் சுணைப்பில்லையா?” என்பது நாஞ்சில்நாட்டு வழக்கு. “உனக்குச் சுணையில்லையா?” என்பது தமிழ்நாட்டு வழக்கு.
சுணைத்தல் = தினவெடுத்தல். மரா.- சுணச்சுண.
சுள் - சுர் - சுர. சுரசுர- சுரசுரப்பு = முள்முள்ளாய் அல்லது கரடுமுரடாய் இருத்தல்.
சுரசுர - சரசர - சருச்சரை = சுரசுரப்பு. “களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே” (பு. வெ. 12, பெண்பாற். 2, உரை). இனி, சுர்- சுரு-சரு-சருச்சரு- சருச்சரை என்றுமாம்.
73).
சுர்- சுரி. சுரித்தல் = குத்துதல். சுரி- சுரிகை = 1. உடைவாள். “சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை’ (பெரும்பாண். 2. கத்தி. “கற்கம் வழித்தற்கு..... கைச்சுரிகை” (தைலவ. தைல.)
சுரிகை- வ. சுரிகா (c).
=
சுரி - சூரி = 1. சூரிக்கத்தி. 2. ஓலையில் துளையிட உதவுங் கருவி. 3. நத்தைச்சூரி. 4. சுணையுள்ள புளிச்சை.
சூரி (கத்தி)- ம., க., து. சூரி., தெ. த்சூரி.
சூரிக்கத்தி.
—
க. சூரிக்கத்தி, தெ. த்சூரக்கத்தி. சூரி என்ற வடிவம்
வடமொழியில் இல்லை.
சுர் - சூர்- சூரை = ஒருவகை முட்செடி.
கரி + அணை = சுரணை = குத்தும் மானவுணர்ச்சி. சுரணை கெட்டவன் என்பது உலகவழக்கு. 2. தன் உணர்ச்சி. “அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு” (இராமநா. உயுத். 33).
,
சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி (Lexicon), நச்சுக் குறும்புத்தனமாக, நினைவு அல்லது தன்னுணர்ச்சி என்று மட்டும் பொருள்படும் ஸ்மரண என்னும் வடசொல்லை, சுரணை என்னும் சொற்குமட்டுமன்றிச் சுணையென்னும் சொற்கும் மூலமாகக் காட்டியுள்ளது. சுணை, சுரணை என்னும் தென்சொற்கள் குத்தற் கருத்தை அடிப்படையாக்க கொண்ட சுள் என்னும் வேரினின்றும், ஸ்மரண என்னும் வடசொல் நினை என்று பொருள்படும் ஸ்ம்ரு என்னும் வினை முதனிலையினின்றும், பிறந்துள்ளன என வேறுபாடறிக. இங்ஙனம் மொட்டைத்தலைக்கும் முழங்காற்கும்