உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஆடுவது, "பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்” (மணிமே. 3 : 125). 7. நடுவிரல். “சுட்டும் பேடும்” (சிலப். 3: 18, உரை). 8. உள்ளீடில்லாக் காய். இந்தத் தேங்காய் பேடு (உ.வ.).

பேடு - பேடன் = ஆண்டன்மை கொண்ட பெண்.

பேடன்- பேடி = 1. பெண்டன்மை கொண்ட ஆண். “பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்” (தொல். கிளவி. 4). “பெண்ணவா யாணிழந்த பேடி" (நாலடி. 251). 2. புணர்ச்சியாற்ற லின்மை. 3. நடுவிரல். “சுட்டுப் பேடி” (சிலப். 3: 18, உரை மேற்கோள்). 4. அச்சம்.

ம., தெ., க. பேடி,து. பேடி (b)

பேடித்தல் = அஞ்சுதல்.

இச் சொல்லைப் பீஷ் என்னும் வடசொற் றிரிபாகக் காட்டியுள்ளது. சென்னைப் ப. க. க. த. அகரமுதலி. அவ் வடசொல்லே பே (பேம்) என்னும் தென்சொற் றிரிபாகும்.

ஆய்த வெழுத்தைப் பேடி யெழுத்தென்று உவின்சிலோ அகரமுதலி குறித்திருப்பது பொருந்தாது. அதை அலியெழுத் தென்பதே பொருத்தமாம். உயிரும் மெய்யுமல்லாத ஆய்தம், ஆணும் பெண்ணுமல்லாத அலிபோன்றிருத்தலின், அலியெழுத் தென்னப் பட்டது. பேடிக்கு ஆண் தோற்றமும் பெண்டன்மையு முண்டு.

“எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம் பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும்”

என்று வெண்பாப் பாட்டியல் நூற்பாவோதினும் (முதன்மொழி. 6), “ஒற்றெழுத்தும் ஆய்தவெழுத்தும் அலியெழுத்தாம்” என்றே அதன் உரை கூறுதல் காண்க. பேடு என்பது பேடனுக்கும் பேடிக்கும் பொதுப்பெயர். ஒரு பாலுந் தழுவாததே அலியாம்.

பெள்- பெட்டு. பெட்டுதல் = விரும்புதல்.

"ஒன்றியான் பெட்டா வளவை”

=

“ஒன்றியான் பெட்டா வளவையின்”

(புறம்.399)

(பொருந.73)

பெட்டாவளவை = விரும்பிக் கேட்பதற்கு முன்னே.

பெள் - பெண் = 1. இருதிணைப் பெண்பால். 2. உயர்திணைப் பெண்பால். “பெண்ணும் பிணாவும் மக்கட் குரிய” (தொல். மரபு. 92). "பெண்ணே பெருமை யுடைத்து” (குறள். 907). 3. சிறுமி. 4.மகள்.