புல்* (விரும்பற் கருத்துவேர்)
93
னாணலும்” (திரிகடு.6).6.வழிபடுதல். 'அமரர்ப் பேணியும்” (பட்டினப். 200). 7. பொருட்படுத்துதல். `துவலைத் தண்டுளி பேணார்” (நெடுநல்.34).8. பிழை நேராமற் காத்தல். “பாணியுந் தூக்கு நடையும் பெயராமை பேணி" (பு. வெ. 12, ஒழிபு, 19). 9. சுவடித்தல். “பேணி நிறுத்தா ரணி” (கலித். 104). 10. கருதுதல் (திவா.). 11. குறித்தல் (சூடா.). 12. உட்கொள்ளுதல். "விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி” (சிறுபாண். 244). 13. அறிதல். “பேணா தொருத்தி பேதுற” (பரிபா. 7: 67). 14. ஒத்தல். “பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் கண்” (பரிபா. 7:63). 15. மகிழ்தல். “பிறனாக்கம் பேணா தழுக்கறுப்பான்” (குறள். 163).
பேண் = 1. விருப்பம். “பிணையும் பேணும் பெட்பின் பொருள” (தொல்.உரி.40). 2. பேண் மரம் (W.).
பேண் - பேணம் = 1. மதிப்பு. 2. பதனம். 3. ஊட்ட டந்தருகை.
பேண் - பேணரவு = பேணல்.
பேண்- பேணி = ஒருவகைப் பணியாரம்.
பேண்- பேணகம் = ஒருவகைப் பலகாரம்.
வ. பேணிக (phenika).
பேணுநர் = பாதுகாப்போர்.
"பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ" (மணிமே. 14 : 47).
பேணார் = பகைவர். “பேணா ரகநாட்டு ” (பு. வெ. 3: 4).
=
ஒ.நோ: பெட்டு = விருப்பம். E. pet.
"pet, n., & v. t. (-tt-). 1. Animal tamed & kept as favourite, or treated with fondness; darling, favourite, (often attrib.); one's - aversion, what one specially dislikes; - cock, small stop-cock for draining, letting out steam, etc; name, one expressing fondness or familiarity.
2.v.t. Trat as a - fondle; - ting party (colloq.), social gathering of young people at which hugging, kissing, etc., are indulged in. (16th C.Sc. & north., orig. unkn.)
The Concise Oxford Dictionary.