இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100
வேர்ச்சொற் கட்டுரைகள்
பாண்டியன் நாடு என்பது பிற்காலத்திற் பாண்டிநாடென மருவிற்று.
குறிப்பு : 1. வளைதற் கருத்து, சாய்தல், கோணல், மடங்கல், நெளிதல், வட்டமாதல், உருண்டையாதல், உருள்தல், சுற்றுதல், சுழலுதல் முதலிய இனக் கருத்துக ளெல்லாவற்றையுந் தழுவும்.
=
2. வட்டக் கருத்தினின்று முழுமைக் கருத்துப் பிறக்கும். எ-டு : கடனை வள்ளிதாய்க் கொடுத்துத் தீர்த்துவிட்டான். வள்ளிது வட்டமானது, முழுமையானது.
E. roundly = in thorough -going manner.
இம் முறையில், பரி என்னும் தென்சொல்லும் வடமொழியில் முன்னொட்டாகி (prefix), அல்லது முழுநிறைவு முழுமைக் கருத்தைத் தோற்றுவிக்கும். எ-டு : பூரணம் - பரிபூரணம்.