உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல் (துளைத்தற் கருத்துவேர்)

103

4. மரப்பொந்து (பிங்.). 5. அப்பவகை. 6. கொப்புளம். 7. அம்மை வடு. 8. குற்றம்.

பொள்ளாமணி = துளையா மணி.

=

பொள்- பொண்டான் = எலி தன்னைப் பிடிப்பவர் தன் வளையைத் தோண்டும்போது, தப்பியோட அமைத்திருக்கும் மறைவான பக்க வளை.

பொல் (பொள்)- பொ. பொத்தல் = (செ. குன்றாவி.). துளைத்தல். “பொத்தநூற் கல்லும்" (நாலடி. 376).

(செ. கு. வி.). தீத்துளைத்துக் கொப்புளித்தல். தீப்பட்டுக் கை பொத்துப் போய்விட்டது (உ.வ.).

பொத்தல் = 1. துளை. 2. கடன். 3. குற்றம்.

ம.பொத்து, க.பொட்டார, து. பொட்ரெ. பொத்தல்- பொத்தர்.

பொத்து = 1. துளைப்பு, துளை. 2. பொந்து. “முதுமரப் பொத்தில்” (புறம். 364). 3. வயிறு. "பொத்தடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர்” (தேவா. 188 : 6). 4. பொய். "புல்லறிவு கொண்டு பல பொத்துமொழி புத்தா” (திருவாத. பு. புத்தரை. 77). 5. குற்றம். “பொத்தி னண்பிற் பொத்தியொடு” (புறம். 212). 6. தீயொழுக்கம் (W.).

பொத்து- பொத்தை = பொத்தல்.

“பொத்தை யூன்சுவர்” (திருவாச. 26 : 7).

6

பொத்து- பொந்து = 1. மரப்பொந்து. "ஆனந்தத் தேனிருந்த பொந்தை’” (திருவாச. 13:2). 2. எலி நண்டு பாம்பு முதலியவற்றின்

வளை.

தெ. பொந்த (b).

பொள்- பொள்ளை = 1. துளை. “பொள்ளைக் கரத்த போதகத்தின்” (திவ். பெரியதி. 5: 1: 2).

பொள்- பொளி. பொளிதல் = (செ.குன்றாவி.) 1. துளைத்தல், துளைசெய்தல் (W.). 2. உளியாற், கொத்துதல் “கல்பொளிந்த தன்ன” (மதுரைக். 482). 3. பிளத்தல் “பொளிந்து திண்சிலை” (விநாயகபு. 22:43). 4. இடித்தல். “கற்றரையைப் பொளிந்து பண்ணின கிடங்கினை யுடைய” (மதுரைக். 730, உரை).