உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்® (துளைத்தற் கருத்துவேர்)

109

போட்டால் அவற்றைப் பீறிப் போடும்” (விவிலியம், தமிழ் மொழிபெயர்ப்பு). 3. துளைத்தல். மூக்குப்பூறுதல். 4. பிளத்தல்.

பீறு - பீறல் = 1. கிழித்தல். 2. கந்தை. “பீறற்சிலை யிதாருக் கென்று” (அரிச். பு. சூழ்வினை. 91). 3. கிழிசல். "சோறது கொண்டு பீற லடைத்தே” (தனிப்பாடல்).

பீறு - பீற்றல் = 1. கிழிசல். 2. கந்தை.

மூக்குப் பூறி = மூன்றாம் பிள்ளையாகப் பிறந்து மூக்குக் குத்தப் பெற்ற ஆண்பிள்ளை.

மூக்குப் பூறி - மூக்குப் பீறி.

பூறு = மலவாய்.

(போடு - தெ. பெட்டு. ஒ.நோ:E. put, OE. potian, L. posit, pono, E. pose).

புள்- பிள். பிள்ளுதல் = (செ. கு. வி.) இரண்டாகவோபலவாகவோ பிளந்து விடுதல். 2. துண்டுபடுதல். அப்பளம் பிண்டு போயிற்று (உ.வ.). 3. மனம் வேறுபடுதல். நட்புப் பிரிதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது (2.01.).

(செ. குன்றாவி.) 1. பிடுதல். “அன்னையவள் தரும் பிட்டுப் பிட்டுண்டாய்” (குமர. பிர. மதுரைக். 1). 2. தகர்த்தல். "முடியொரு பஃதவை யுடனே பிட்டான்” (தேவா. 883:8).

க.பிளிகு (g)

பிள் - பிள. பிளத்தல் = (செ. கு. வி.) 1. வெடித்தல், "வேய்பிளந் துக்க வெண்டரளம் ” (கம்பரா. தாடகை. 8). 2. திறத்தல். “வாய்பிளந்துக்க” (ng ng).

(செ. குன்றாவி.) 1. இரண்டாக வுடைத்தல். “மலைகீழ்து பிளந்த சிங்கம்” (திவ். திருவாய். 7:4: 6). 2. வெடிக்கச் செய்தல். 3. ஊடுருவுதல். “ஒண்டழல் விண்பிறந்த தோங்கி” (திருவாச. 18: 8). 4. பாகுபடுத்துதல், பகுத்தல். "யாதும் பிளந்தறியும் பேராற்றலான்” (சிறுபஞ். 58). 5. வெல்லுதல். அவனைப் பேச்சிலே பிளந்துவிட்டான் (உ.வ.).

பிள- பிளவு = 1. வெடிப்பு. 2. விரிந்துண்டாகுஞ் சந்து. 3. பிரிவு. 4. பிரிந்திசைப்பு. இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்பட” (தொல். சொல். 412, சேனா.).

பிள- பிளவை = 1. பிளக்கப்பட்ட துண்டு. “பைந்நிணப் பிளவை” (மலைபடு.176). 2. வெடிக்கும் சிலந்திவகை.