உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல் (துளைத்தற் கருத்துவேர்)

பிசுக்கு- பிசுக்கன் = புல்லன், சிறுமகன்.

113

பிசுக்கர்=புல்லர். "பேதவாதப் பிசுக்கரை” (திருவிசைப். திருமாளி.

4:5).

பிசுக்கு பிசுக்கி

=

(2.21.).

புல்லன், சிறியோன், போடா பிசுக்கி

பிசுக்கு- விசுக்கு = சிறு துணிக்கை.

விசுக்கு- விசுக்காணி = மிகச் சிறியது.

விசுக்காணிப் பயல் = மிகச் சிறுவன், குட்டிப் பையன்.

பிள்- பிர்- பிரி. பிரிதல் = 1. கட்டவிழ்தல். மூட்டை பிரிந்து விட்டது (உ.வ.). 2. முறுக்கு நெகிழ்தல். 3. தொகுப்பு நீங்குதல். மாலை பிரிந்து கிடக்கிறது. 4. பகுக்கப்படுதல். “பிரிப்பப் பிரியா” (தொல். சொல். 410). 5. விலகுதல். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து போனார்கள் (உ.வ.). 6. வேறுபடுதல். “உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்” (தொல். சொல். 4). 7. பொருத்து விடுதல். 8. வகைப்படுதல். 9. தண்டப்படுதல். இந்த ஊரிற் பணம் பிரியாது (உ.வ.).

கிளை.

ம. பிரி(யுக), க. பிரி.

பிரி- பிரிவு = 1. விலகல். 2. பாகம். 3. வகுப்பு. 4. வகை. 5. பகுதி. 6.

-

=

பிரி - பிரியல் - பிரிசல் = 1. பாகப்பிரிவு. 2. கூரை பிரிப்பு. 3. கட்டவிழ்வு. 4. பணந்தண்டல்.

பிள் - பிட்டு = பிண்டு உதிரியான சிற்றுண்டி வகை. “மதுரையிற் பிட்டமுது செய்தருளி” (திருவாச. 13: 16). தினைமா(W.).

ஒ.நோ: உதிரி = பிட்டு.

ம.க.,தெ.பிட்டு. பிட்டு - வ. பிஷ்ட

பிள் - பிண்டி

=

2.மா

1. நுண்பொடி. 2. மா. "செந்தினையின் வெண் பிண்டி” (பதினொ. திருவீங். 44). 3. பிளந்த நாக்குப் போன்ற பிண்ணாக்கு (பிள் + நாக்கு). "பாரிற் பிண்ணாக்கு முண்டாம்" (காளமேகம்).

தெ.பிண்டி, து. புண்டி.

பிண்ணாக்கு வ. பிண்யாக்க. எள், இலுப்பை, வேம்பு முதலியவற்றின் விதைகளை எண்ணெயாட்டியபின் எஞ்சிய சக்கை, பிளவுபட்ட நாக்குப் போலிருப்பதால் பிண்ணாக்கு எனப்பட்டது.