உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

வேர்ச்சொற் கட்டுரைகள்

பகுத்தல் (பிரித்தல்), துண்டித்தல், (துண்டுபண்ணுதல்), பொடித்தல் என்றும்; குலைத்தல், கலைத்தல் என்றும்; வினைக்கும் கருவிக்கும் ஏற்றவாறு பலதிறப்படும்.

மாழையும் (metal) கல்லும் மரமும் போன்ற வன்பொருள்கள் கருவிகளாலும், கனிகளும் உண்டி வகைகளும் களிமண்ணும் போன்ற மென்பொருள்கள் கருவியாலும் கையாலும் துளைக்கப்படும்.

சில பொருள்கள், தக்க நிலைமை வரின், நிலம் வெடிப்பதும் கனிபிளப்பதும் போல, தாமாகவே துளையுண்ணும்.

குழித்தல் குடைதல் போன்றன ஆழவாட்டில் துளைத்தல்; வெட்டுதல், அறுத்தல் போன்றன நீளவாட்டில் துளைத்தல்.

குழித்தலுங் கீறுதலுங் குடைதலும் போன்றன குறையத்துளைத்தல்; துருவுதலும் வெட்டுதலும் பிளத்தலும் போன்றன நிறைய அல்லது முற்றத் துளைத்தல்.

முற்றத் துளைத்தலால் பகுத்தல், பிரித்தல், துணித்தல், பொடித்தல் முதலியன ஏற்படுகின்றன.

(பிரி - பிரிவு.ஒ.நோ : L. pars, partis, portionem)

=

பள்ளி = 5. படுக்கையறையுள்ள வீடு. 6. வீடு. 7. வீடு போன்ற இடம், இடம். "சொல்லிய பள்ளி நிலையின வாயினும்” (தொல். எழுத்து. பிறப். 18), “சொல்லிய பள்ளி எழுதரு வளியின்” (ஷெஷஷ 20). 8. தச்சன் பணி செய்யும் இடம், பட்டறை, “தச்சன் வினைபடு பள்ளி” (களவழி. 15). 9. அரசன் வீடாகிய அரண்மனை. பள்ளிக்கட்டில் =அரியணை, “நின்பள்ளிக் கட்டிற் கீழே” (திவ். திருப்பா. 22). பள்ளிக்கட்டு இளவரசியின் திருமணம் (நாஞ்.). பள்ளித் தேவாரம் = அரண்மனைத் தெய்வ வழிபாடு (நாஞ்.). 10. தெய்வ வீடாகிய கோவில். "கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்” (குறள். 840). 11. சமண புத்தர் கோவில். புத்தர்நோன்பியர் பள்ளி யுள்ளுறை” (திவ். பெரியதி. 2 : 1 : 5). 12. முகமதியர் கோவில், பள்ளிவாசல். 13. இறந்த அரசரின் நினைவுக் குறியாகக் கட்டப்பட்ட கல்லறை. (S. I. I. III, 24). பள்ளியடைப் படலம் (கம்பரா.). 14. முனிவர் தவநிலையம். "மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்” (மணிமே. 18:8). 15. அறச்சாலை, அயலாரையும் இரப்போரையும் உண்பிக்கும் ஊர் மடம். 16. மடத்திலும் கோவிலிலும் நடத்தப்பெற்ற கல்விக்கூடம். "பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்” (திவ். பெரியதி. 2 : 3 : 8), 17. அரண்மனை அல்லது கோவில் உள்ள நகரம் (பிங்.). 18. தாழ்வான கூரை வீடுகளுள்ள இடைச்சேரி. "காவும் பள்ளியும்” (மலைபடு. 451). 19. இடைச்சேரி போன்ற சிற்றூர் (பிங்.).

6