உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல் (துளைத்தற் கருத்துவேர்)

119

பணை = 1. மருதநிலம். "பெருந் தண்பணை பாழாக” (புறம். 16). 2. வயல். “இரும்பணை திரங்க” (பதிற். 43.12). 3. நீர்நிலை (பிங்.).

பண் பணி. பணிதல் = 1. தாழ்தல். 'பணியிய ரத்தைநின் குடையே” (புறம். 6), 2. செருக்கின்றியடங்குதல். “எல்லார்க்கு நன்றாம் பணிதல்” (குறள். 125). 3. இறங்குதல் (W.). 4. தாழ்வாதல். 5. குறைதல். 6. எளிமையாதல். 7. வணங்குதல். "உடையான் கழல் பணிந்தின (திருவா. 4:35) பணிந்தவன் = குள்ளன்(W.).

ம. பணியுக

பணித்தல் = 1. தாழ்த்துதல். "வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப” (பு. வெ. 4 : 9, கொளு). 2. குறைத்தல் (W.). 3. மிதித்தல், “நந்து மாமையும் பணித்து” (சீவக. 2109). பணிவிடை = தொண்டு, குற்றேவல். திருப்பணி= தெய்வத் தொண்டு.

பணி

=

படி. படிதல் 1. அடியில் தங்குதல். வண்டல் படிந்திருக்கிறது (உ.வ.). 2. தங்குதல். “பறவை படிவன வீழ” (நெடுநல். 10). 3. வயமாதல். “அடியாத மாடு படியாது” (பழ.). 4. கீழ்ப்படிதல். பெரியோர்க்குப் படிந்து நடத்தல் வேண்டும் (உ.வ.). 5. குளித்தல். “தடங்கடலிற் படிவாம்” (திருவாச. 38:9). 6. அமுங்குதல். எண்ணெய் தேய்த்துச் சீவினால் மயிர் படியும் (உ.வ.). 7. தணிதல், வெள்ளம் படிந்தது (உ.வ.). 8. கீழே விழுந்து வணங்குதல். “சிரந் தலத்துறப் படிந்து” (உபதேசகா. சிவத்து. 344).

பணி செய்வோன் = 1. வேலைக்காரன். 2. விழாக்காலத்தில் தாரையும், இழவுநாளில் சங்கும் ஊதுபவன். கீழ்ப்படிதல் = சொன்னபடி செய்து பணிவாய் நடத்தல்.

பணி- பாணி, பாணித்தல் = 1. காலந்தாழ்த்தல். “பாணிதீ நின்சூள்” (பரிபா.8:56).2. காத்திருத்தல். 'பாணியே மென்றார்” (கலித். 102). 3. பின்வாங்குதல். 'சமரிற் பாணியான்" (கந்தபு. மூவாயிரர். 59).

பாணி = பள்ளமான இடத்தில் தங்கும் அல்லது பள்ளம் நோக்கி ஓடும் நீர். "விண்ணியல் பாணியன்” (பதினொ. பொன்வண். 30). க. பணி, மரா. பாணி, இ பாணீ.

நீரைக் குறிக்கும் பாணி என்னுஞ்சொல் வடமொழியில் இல்லை. நீரம் என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் நீர என்று கடைக்குறைந்து வழங்கும்போது, பாணி (நீர்) என்னும் சொல் இந்தியில் பாணீ என்று திரிந்து வழங்குவது இயற்கைக்கு மாறன்று.