உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்® (துளைத்தற் கருத்துவேர்)

123

பாடு - பாட்டு = 1. பாடுகை. 2. இசைப்பாடல். 3. இன்னிசை. “கூத்தும் பாட்டும்" (மணிமே. 2 : 19). 4. செய்யுள் “பாட்டுரை நூலே” (தொல். செய். 78). 5. வசைமொழி. என்னிடம் பாட்டுக் கேட்க வேண்டுமா? (உ.வ.).

பாடு - பாடகன் = பாடுவோன். “பாடகர் பாணர் புகழக் கண்டு” (திருவாலவா. 55: 3).

பாடகன்- பாடகி = பாடுபவள் (நாம. 183).

பாடகன்- பாடினி = பாணர்குல மகள். “மறம்பாடிய பாடி னி யும்மே” (புறம். 11).

பாடு - பாடி = 1. பாடுபவன். எ - 1. பாடுபவன். எ - டு : வலவன்பாடி. பாடுபவள். எ-டு : கூழுக்குப் பாடி. பாடுவது. எ-டு : வானம்பாடி. 2. பாடி யிரப்பெடுப்பவன்- வள். பாடி பரதேசி (W.).

பாண்- பாணி = 1. இசைப்பாட்டு (திவா.). “புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி” (சிலப்.8:44). 2. இன்னிசை (சங்கீதம்). “பாணியாழ” (சீவக. 1500). 3. இசையொலி. “கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்” (சிலப். 13: 148). 4. இசையுறுப் பாகிய தாளம். “தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக” (கலித். 102).

Poem என்னும் கிரேக்க ஆங்கிலச் சொல்லும், பண் செய்யுள் என்னும் இரு சொற்களை வேர்ச்சொற் பொருளில் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.

Gk. poema = poiema f. poieo, to make.

பொள்- பொய். பொய்தல் = (செ.கு.வி.) 1. துளைக்கப்படுதல். “பொய்தக டொன்று பொருந்தி” (கம்பரா. பஞ்ச. 49). 2. பிடுங்கப் படுதல். “பொய்த குத்தின....புண்” (கம்பரா. கிங்கர. 50).

(செ.

குன்றாவி.) வீழ்த்துதல். “அவை பார்சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33).

வீழ்த்துதலாவது பள்ளமான அல்லது கீழ்மட்டமான இடத்தை அடையச்செய்தல்.

பொய்- பொய்கை பொய்கை = 1. ஏரி அல்லது குளம். “பொய்கை வாயிற் புனல்பொரு புதவின்” (பதிற். 27). 2. இயற்கையான ஏரி. “வாவியும் பொய்கையுங் கண்டீர்” (சீவக. 337).

பொய் = 1. உட்டுளை. "பொய்பொரு முடங்குகை" (சிலப். 15: 20). 2. மரப்பொந்து (பிங்.). 3. உள்ளீடில்லாதது. 4. உண்மை யல்லாதது. "பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ” (குறள். 938). 5. போலியானது