126
வேர்ச்சொற் கட்டுரைகள்
3. நாள். “விருந்தும் மருந்தும் மூன்று பொழுது” (பழ.). 4. வாழ்நாள். “பொழுதளந் தறியும் பொய்யா... காண்கையர்” (முல்லைப். 55). 5. சிறுபொழுது.
"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது”
(குறள். 1231)
6. பெரும்பொழுது. “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்” (தொல். அகத். 19). 7. நேரம். “நிற்பரவு பூசையினும் பொழுது போக்கெனக் கருள் புரிவாய்” (சிவப். பிரபந். சோண. 29). 8. வேளை. “கலந்த பொழுதுங் காட்சியும் அன்ன” (தொல். அகத். 16). 9. அமையம். நான் நிலையத்தை அடைந்தபொழுது வண்டி வரவில்லை (உ.வ.). 10. நொடி. “ஒருபொழுதும் வாழ்வ தறியார்” (குறள். 337). 11. தடவை. முப்பொழுது மருந்து (உ.வ.). 12. தக்க சமையம் அல்லது காலம். “இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள். 481). "பொழுதொடு புணர்தல்” (பிங்.). 13. பகல் அல்லது இரவு ஒரு பொழுது வேலை, ஒருபொழுது உறக்கம்.
ம. பொழுது, ப.க. போழ்து, து. பொர்து, தெ. ப்ரொத்து (dd).
பொழுது- போழ்து = 1. வேளை. “அழல்மண்டு போழ்தின்” (நாலடி. 202). 2. முழுத்தம் (முகூர்த்தம்). "இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய" (கலித். 93).
போழ்து - போது = 1. கதிரவன். “போதுஞ் சென்றது குடபால்” (கம்பரா. வனம்புகு. 19). 2. வேளை அல்லது அமையம். "ஆட்கொண்ட போதே கொண்டிலையோ” (திருவாச. 33:7).
போழ்து- போழ்தம் = வேளை.
பொள்- பொய். பொய்தல் = வீழ்த்துதல். “அவை பார்சோரப் பொய்தான்” (கம்பரா. அட்ச. 33).
வீழ்தல் என்னும் தன்வினைச்சொல், மழை பெய்தலையுங்
குறிக்கும்
எ-டு:
“விசும்பிற் றுளிவீழி னல்லால்
"வீழ்க தண்பெயல்”
(குறள். 16)
(தேவா.)
பொய்- பெய். பெய்தல் = 1. துளைவழி நீர் ஒழுகுதல் போல முகிலினின்று மழை விழுதல். “பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்.