உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

வேர்ச்சொற் கட்டுரைகள்

நன்னிக்கல் = மருந்தரைக்குஞ் சிற்றம்மி (தைலவ. பாயி. 12, உரை). நன்னிநூல் = துணியின் ஓரத்திலுள்ள சிறு நூல்துணுக்கு (W.). நன்னிப் பயல் = சிறுபையன்.

சிறு பிள்ளைகளையும் சிற்றுயிரிகளையும் நன்னியுங் குன்னியும், நன்னி பின்னி என்பது உலக வழக்கு.

நுன் - நுனி = 1. நுனை, உச்சி. “நுனிக்கொம்ப ரேறினார்” (குறள். 476). 2. நுண்மை (திவா.). ம. நுனி.

நுனித்தல் = 1. கூராக்குதல். 2. கூர்ந்து நோக்குதல் அல்லது ஆராய்தல். “நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்” (மணிமே. 19 : 80).

நுனிப்பு

=

கூர்ந்தறிகை. 'நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின்” (பெருங். வத்தவ. 7: 34).

நுனி - நுதி = 1. நுனி. “நுதிமுக மழுங்க” (புறம். 31). 2. கூர்மை. 3. அறிவுக் கூர்மை. 'நுதிகொணா கரிகன்' (சீவக. 1110). 4. தலை. "நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் றோற்றங்காண்” (கலித். 101). 5. முன்பு. "நூற்றை வரோடு நடந்தாணுதி” (சீவக. 1933, உரை).

நுனி - நுனை = நுனி, முனை. “கூர்நுனை வேலும்” (புறம். 42).

=

நுல் - நொல் - நொற்பு- நொற்பம் = 1. நுட்பம், நொற்பமான வேலை (W.). 2. எளிமை. "நொற்ப வுலகத்தவர் நோய்தீர்த்து” (பஞ்ச. திருமுக. 611).

நொற்பம்- நொற்பன் = சிறியன், எளியன்.

நுல் - நூல் (எள்) - நோல்- நோலை = 1. எள்ளுருண்டை. "புழுக்கலு நோலையும்” (5, 68). 2. எட்கசிவு, “அணங்குடை நோலை" (பு. வெ.3: 40).

நூல் - நூ = எள் (சூடா.). தெ. நூ, நூவு, நுவு, நுவ்வு.

நூ- = எள் (பிங்.). தெ. நூவு.

நூவுநெய் = எள்நெய் = எண்ணெய் (நல்லெண்ணெய்). தெ. நூனெ.

முதன்முதல் தோன்றியது ஆவின் (அல்லது எருமையின்) நெய். எள்ளிலிருந் தெடுக்கப்பட்ட நெய் எண்ணெய் (எள்நெய்) எனப்பட்டது. அது பின்னர் மாட்டுநெய் தவிரப் பிறநெய்வகைகட் கெல்லாம் பொதுப்பெயரான பின், நல் என்னும் அடைபெற்றது.