உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்® (துளைத்தற் கருத்துவேர்)

143

"முன்னைப் பீடத்தின் பாதங் குறைந்து” (மேருமந். 1172). 6. பணி (சரியை), பத்தி (கிரியை), ஓகம் (யோகம்), ஓதி (ஞானம்) என்னும் நால்வகைச் சிவநெறி யொழுக்க நிலை.

பாதம்-வ. பாத, Gk. podos, OS., OE. fot, OHG. fuoz, ON. fotr, Goth. fotus, E. foot.

பாதம் - பாதை = நடப்பவர் பாதம் படுவதால் அமையும் வழி. ஒ.நோ : தடம் = அடிச்சுவடு, வழி.

OE., E. path, OLG. pad, OHG. pfad.

பாதம் என்னும் சொல் வடமொழியிற்

பெருவழக்காய் வழங்குவதனாலும், பொய்யுடை வடமொழியர் சொல்வன்மை யாலும், ஆழ்ந்த ஆராய்ச்சியின்மையாலும், தமிழ்ப் பேராசிரியர் பலரும் அது வடசொல்லென்றே கருதிக்கொண்டிருக்கின்றனர். அடி என்பது, ஒன்றன் கீழ்ப்பகுதியையுங் கீழிடத்தையுமேயன்றி, பாதம் என்னும் சினைப் பகுதியைக் குறிப்பதாகாது. பாதை யென்னும் சொல் வடமொழியிலின்மையும் இதை வலியுறுத்துஞ் சான்றாகும்.

படு - பது - பதுங்கு. பதுங்குதல் = 1. பதிவிருத்தல். “பதுங்கிலும் பாய்புலி" (திருமந். 2914). 2. ஒளிதல். “அரண்புக்குப் பதுங்கி னானை” (கம்பரா. அங்கத. 31). 3. மறைதல். "பருதியை முகின் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல்” (சி. சி. 2 : 83). 4. பின்னிற்றல்.

பதுங்கு = பதிக்கும் குத்துக்கல் வரிசை.

பதுங்கு பிடித்தல் = மேற்றளத்திற்குச் செங்கற் பாவுதல்.

=

பதுங்கூன்றுதல் = பதுங்கு பிடித்தல்.

பதுங்கு- பதுங்கி = 1. பின்னிற்பவன். 2. கூச்சமுள்ளவன்.

பதுங்கல்- பதுங்கலன் = பதுங்கி.

-

பதுங்கு - பதுக்கு - பதுக்கம் = 1. ஒளிகை. 2. கரவு. பதுக்கமாய் நடக்கிறான் (W.). 3. எய்தல் பாய்தல் முதலியவற்றிற்குப் பதுங்குகை. 3. பின்னிற்கை (W.) 5. வணிகப் பொருள்களை அல்லது திருட்டுப் பொருள்களை மறைத்து வைக்கை.

பதுக்குதல் = ஒளித்தல்.

பதுக்கு – பதுக்கை = போரிற்பட்ட மறவரை அல்லது காட்டு விலங்காற் கொல்லப்பட்டவரை மறைக்குங் கற்குவியல். “பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை" (ஐங்.362).2. மணற்குன்று. "பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி” (புறம். 264). 3. இலைக்குவியல். "பதுக்கை