உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

வேர்ச்சொற் கட்டுரைகள்

(தொல். குற்றி. 78). 2. பயிற்சி பெறுதல் (W.). 3. நிலைபெறுதல். “வானின் றுலகம் வழங்கி வருதலான்” (குறள். 11). 4. இயங்குதல். “வளிவழங்கும் மல்லன்மாஞாலம் கரி” (குறள். 245). “முந்நீர் வழங்கும் நாவாய்” (புறம். 13).5. உலாவுதல். "சிலம்பில் வழங்க லானாப் புலி” (கலித். 52). 6. நடமாடுதல். “பேய் மகள் வழங்கும் பெரும்பாழாகும்” (பதிற். 22 : 37). “வழங்காப் பொழுது நீ கன்றுமேய்ப் பாய்போல்” (கலித். 112). 7. அசைந்தாடுதல். “மழகளிறு கந்து சேர்பு...... வழங்க” (புறம்.22). 8. ஏற்றதாதல். வாய்க்கு வழங்காத கறி(W.).

(செ. குன்றாவி.) 1. கையாளுதல். தமிழ்ப் புலவர் தனித்தமிழ்ச் சொற்களையே வழங்குதல் வேண்டும் (உ.வ.).2. சொல்லுதல், “யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே” (குறுந். 21). 3. கொடுத்தல். “வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி” (பெரும்பாண். 26). 4. விடுத்தல் 'சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்” (புறம். 14). 5. பகிர்ந்தளித்தல். க.பழகு (g).

வழங்கு-வழக்கு (பி.வி.). வழக்குதல் = போக்குதல். “வழக்குமாறு கொண்டு” (கலித். 101).

வழங்கு-வழக்கு (பெ.) வழக்கு (பெ.) = 1. இயங்குகை. 'வையை யன்ன வழக்குடை வாயில்” (மதுரைக். 159). “வழக்கொழியா வாயில்” (பு. வெ. 10, முல்லைப். 4). 2. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிடம். “வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே” (தொல். மரபு. 93). 2. உலக வழக்கு. “வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்" (தொல். பனம். சி. பா.). 3. இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்னும் இருவகைச் சொல் வழக்குகள்.

"இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் றாகும் மூவகை யியல்பும் இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்”

(நன். 207)

4. பழக்கவொழுக்கம். “வாய்மையுடையார் வழக்கு" (திரிகடு. 37). 5. நெறி. “அன்புற் றமர்ந்த வழக்கென்ப” (குறள். 75). 6. நயன்மை (நீதி). “வழக்கன்று கண்டாய்” (திவ். இயற். 2: 19). 7. சச்சரவு, உரிமைப் பிணக்கு. 8. சச்சரவுபற்றிய முறையீடு. “வழக்குரைகாதை” (சிலப். 20). 9. கொடை. "உடையான் வழக்கினிது ” (இனி. நாற். 3).

வழக்கு என்னும் சொற்கு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியிற் குறிக்கப்பட்டுள்ள 7ஆம் பொருள். “Litigation; நீதி ஸ்தலத்திற்