154
வேர்ச்சொற் கட்டுரைகள்
நத்தப்பாழ் = பாழூர்.
முப்பாழ் = 1. மூவகை இழப்பு. 2. உடம்பிற்குள் வெறிதான மூவிடம். 3. முப்பொருளின்மை. 'முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்"
பாழ்க்கோட்டம் = சுடுகாடு. "பொடியுடுத்த பாழ்க்கோட்டஞ் சோரமுன்” (பதினொ. ஐயடி. க்ஷேத். 2).
பாழ்கிடை
=
விடாமற்
பற்றிக்கிடக்கை.
பாழ்கிடையாய்க் கிடக்கிறான் (உ.வ.).
கடன்காரன்
பாழ்ங்கிணறு = தூர்ந்து அல்லது இடிந்து பயனற்ற கிணறு.
பாழ்ங்குடி = சீர் கெட்ட குடும்பம்.
பாழ்மூலை = எளிதிற் செல்ல முடியாத தொலைவான இடம். அவன் எங்கேயோ பாழ்மூலையில் இருக்கிறான் (உ.வ.).
பாழ்வாய் கூறுதல் = நன்றி மறந்து முணுமுணுத்தல்.
=
பாழ்வாயன் = நன்றி மறந்து குறைகூறி.
பாழ் - பாழி = 1. வெறுமை. 2. வானம் (ஆகாயம்) (யாழ். அக.). பாழி - பாழிமை = வெறுமை. “பாழிமை யான கனவில்” (திவ். பெரியதி. 11 : 2:6).
பாழூர் = குடிநீங்கிய ஊர். “பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே” (புறம். 132).
பாழுக்கிறைத்தல் = 1. பாழ்நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுதல். “இரவுபகல் பாழுக் கிறைப்ப” (குமர. பிர. நீதி. நெறி. 90). 2. வீணான வினை செய்தல். “பாழ்க்கிறைத்துக் கழித்தீர்” (அருட்பா. VI, உறுதி கூறல், 2).
=
பாழ் - பழுது = 1. சிதைவு. "இவை பழுதிலை” (தேவா. 543:2). 2. பதனழிந்தது. 3. பிணமாயிருக்குந்தன்மை (சிலப். 19: 66, அரும்.). 4. தீங்கு. “பழுதெண்ணும் மந்திரியின்” (குறள். 639). 5. குற்றம். “பழுதிறொல் புகழாள் பங்க” (திருவாச. 28 : 10). 6. பயனின்மை. “பழுது பயமின்றே” (தொல்.உரி.26). 7. பொய். “பழுதுரை யாதவன் உரைப்பான்” (திருவாலவா. 19:9). 8. வறுமை. “பழுதின்று” (பொருந. 150). 9. உடம்பு. “பழுதொழிந் தெழுந்திருந்தான்” (சிலப். 19 : 66). 10. ஒழுக்கக்கேடு. 11. வெற்றிடம்.
பழுது – வழுது = பொய் (பிங்.).