உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மோருக்கு முன்வடிவம் தயிரும் பாலும் முத்துக்கு முன்வடிவம் சிப்பி; வான்

நீருக்கு முன்வடிவம் முகிலாம்; வட்ட

நிலவுக்கு முன்வடிவம் பிறையாம்; வாழைத்

தாருக்கு முன்வடிவம் அடுக்குப் பூவாம்

தமிழ்ச் சொல்லின் முன்வடிவாம் மூலச் சொல்லின்

வேருக்குள் ஆய்ந்தறிந்து வெற்றி கண்டார்

வேறெவர் நம் பாவாணர் ஒருவர் தாமே!

சூரியன் தமிழ்ச்சொல் சொலித்தலும் தமிழ்ச்சொல்

சுவடியும் நடனமும் தமிழே

ஆரியன் அறியான், மந்திரம் தமிழ்ச்சொல்

அதிகமும் பகவனும் தமிழே

பூரியும் மதமும் மாதமும் மதியும்

பொத்தகம் பொக்கசம் இவையும்

வேரினைப் பிடித்தால் தமிழெனத் தெரியும்

வேட்கபா வாணரின் தெரிவே!

எதுவெங்கே எக்கேடா கெட்டுப் போனால் எமக்கென்ன என்றிருந்தால் இடுப்பில் கட்டும் புதுவேட்டி சற்றேதான் நெகிழும் போது பொள்ளென்று தாம் உருவிக் கொண்டு மேலும் இதுநாங்கள் உங்களுக்குத் தந்த தென்பார் இருக்கின்றார், நாம்வாளா விருக்கின் றோமே! எதுதான்நம் கடன்என்று தெரிந்து கொள்ள இருக்கும்பா வாணர்நூல் எல்லாம் கற்பீர்!

தமிழ்மன்

சென்னை

குடிக்கட்டகை

600

017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

- பாவலர் அருள் செல்லத்துரை 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.