உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

=

வேர்ச்சொற் கட்டுரைகள்

நுழு நுழை, நுழைதல் 1. இடுக்கமான இடைவழி உட்செல்லுதல். திருடன் பலகணி வழியாய் வீட்டிற்குள் நுழைந்து விட்டான் (உ.வ.). "மலர்ப்பொழி னுழைந்து” (சிலப். 10 : 35). 2. இடைச்செருகலாய் அமைதல். தொல்காப்பியத்துள்ளும் ஆரியக் கருத்து நுழைந்துவிட்டது (உ.வ.). 3. வலக்காரமாக அல்லது கமுக்கமாக ஒரு வேலையிற் சேர்தல். அவன் மெள்ள மெள்ள நடுவணரசு அலுவலகத்தில் நுழைந்துகொண்டான் (உ.வ.). 4. நுண்ணிதாக விளங்குதல். அது அவன் மதியில் நுழையவில்லை (உ.வ.).

ம. நுழுக, க. நொளெ.

நுழை = 1. சிறுவழி. “பிணங்கரினுழைதொறும்” (மலைபடு. 379). 2. பலகணி (பிங்.).

நுழைகடவை, நுழைவழி, நுழைவாயில் முதலியன சிறு திறப்புகளை அல்லது வாயில்களை உணர்த்துதல் காண்க.

நுழு - நுழல் - நுணல் = மணலிற்குள் நுண்ணிதாய் முழுகிக் கிடக்கும் தவளைவகை.

"மணலுண் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலுந்தன் வாயாற் கெடும்”

நுணல் - நுணலை (பிங்.).

(பழ 184)

நுணா = நுணல் போன்ற காய் காய்க்கும் மஞ்சணாறி மரம்.

நுணா- நுணவு (மலை.) = மஞ்சணாறி மரம்.

நுணவு- நுணவம் = மஞ்சணாறி மரம்.

“நாகுமுதிர் நுணவம்” (சிறுபாண். 51).