உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

வேர்ச்சொற் கட்டுரைகள்

நில- நிலா = 1. திங்கள். “துணிநிலா வணியினான்” (திருவாச. 35:

5). 2. நிலாவொளி. “விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களும்” (நாலடி. 151). 3. ஒளி."நிலா விரித்து முச்சக முற்றும் நிழல்செய்” (திருநூற். 78). ம. நிலா, தெ. நெல.

நில- நிலவு. நிலவுதல் = ஒளிவிடுதல் (பிங்.).

நிலவு = நிலா. “நிலவுப்பயன் கொள்ளு நெடுமணன் முற்றத்து” (நெடுநல் 95).

நில - நிழல் = 1. ஒளி. “நிழல்கா னெடுங்கல்” (சிலப். 5 : 127). 2. படிவடிவம் (பிரதிபிம்பம்). “நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கி” (சீவக. 2790). 3. சாயை. 'நாணிழற் போல" (நாலடி. 166). 4. குளிர்ச்சி (சூடா.) 5. அருள். 'தண்ணிழல் வாழ்க்கை” (பட்டினப். 204). 6. நயன்மை (நீதி. பிங்.). 7. பேய் (உ.வ.).

ம.நிழல், க.நெழல், தெ. நீட.

நிழலுதல் = 1. ஒளிவிடுதல் “நெய்த்தலைக் கருங்குழ னிழன்று” (சீவக. 1101). 2. படிவடிவிடுதல் (பிரதிபலித்தல்) (W.). 3. சாயை வீழ்த்தல். “வண்டுந் தேன்களு நிழன்று பாட” (சீவக. 1270). 4. காப்பா யமைதல். "ஏரோர்க்கு நிழன்ற கோலினை” (சிறுபாண். 233).

6

நிழற்றுதல் = 1. ஒளிவிடுதல். “பசும்பொனவிரிழை பைய நிழற்ற” (ஐங். 74). 2. சாயை வீழ்த்தல். “கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்” (புறம். 9). 3. மணியடித்தல். “நெடுநா வொண்மணி நிழற்றிய நடுநாள்" (முல்லைப். 50).

நிழற்ற-நிழறு. நிழறுதல் = ஒளிவிடுதல். “திண்சக்கர நிழறு தொல்படையாய்” (திவ். திருவாய். 6 : 2 : 5).

நிழல் - நிழலி = 1. ஒளி (திவா.). 2. நயன்மை (நீதி (பிங்.).

நிழல் - நீழல் = 1. ஒளி. 2. சாயை. 3. காப்பு. 4. காப்புடைய நாடு. “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்” (குறள். 1034).

நீழை = ஒளி. 'நீழை யாண்மலர்” (அரிசமய. குலசே. 5).

நிழல் - நிணல் = சாயை.

நிழல் - நிகர் = 1. ஒளி. “நீர்வார் நிகர்மலர்” (அகம். 11). 2. சாயை. 3. சமம். "நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்” (நாலடி. 64). 3. சமமாய் நின்று செய்யும் போர்.

ஒ.நோ:சமம் = ஒப்பு, போர். சமம் - சமர்.