உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (நீட்சிக் கருத்துவேர்)

51

நட - நடவு. நடவுதல் 1. கருமம் நடத்துதல். 2. ஏவுதல், செலுத்துதல். ‘“கணையினை நடவி” (விநாயகபு. 80 : 704).

தெ., க. நடப்பு, து. நடப்பாவுனி.

நடவு நடாவு. நடாவுதல் = 1. நடாத்துதல். "இருளால் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” (திவ். இயற். திருவிருத். 33).

நடைபடி = 1. நடத்தை. 2. வழக்கம். 3. அறமன்ற நடபடிக்கை.

நடைபடிகள் = செயல்கள்.

நடைபடிகள்

-

நடபடிகள்

=

செயல்கள். "அப்போஸ்தலர்

நடபடிகள்”(விவிலியம்).

நடபடி - நடபடிக்கை = அறமன்றச் செயல்.

நடபடி = 1. நிகழ்ச்சி. 2. வழக்கம். 3. நடபடிக்கை. ம. நடபடி.

நடபடி நடவடி = நடபடிக்கை.

ம்.,து. நடவடி.

நடபடிக்கை - நடவடிக்கை = 1. நடத்தை. 2. செயல். 3. அறமன்ற வழக்குத் தீர்ப்புச் செயல்.

க. நடபடிக்கெ, து. நடபாட.