70
வேர்ச்சொற் கட்டுரைகள்
பொத்தகம்-வ. புஸ்தக, இ. புஸ்தக்.
பூர்ஜம் பட்டையினின்று செய்யப்பட்டது என்று வடவர் கூறும் பொருட்கரணியம் பொருந்தாது. புஸ்தக என்னும் வடசொல் வடிவையே புத்தகம் என்று திரித்து வழங்கி வருகின்றனர்.
ஒ.நோ : மனம் - வ. மனஸ் - மனது.
மதி-மாதம்- வ. மாஸு மாசம். மாதம்-வ.மாஸ்
பொத்தகம் = ஏடுகளின் சேர்க்கை. ஏட்டுச் சுவடி, சுவடி சேர்த்தல் என்னும் வழக்குகளை நோக்குக.
பொத்து- பொட்டு = நெற்றிமூலை மண்டையோட்டுப் பொருத்து. பொட்டுதல் = பொருத்துதல், சேர்த்துக் கட்டுதல். பொட்டு - பொட்டணம்.
―
பொரு பொருநன் = 1. உவமிக்கப்படுவோன். "போர்மிகு பொருந" (திருமுருகு. 276). 2. ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனும் சென்று உவமித்துப் பாடும் பாணன் (பாடகன்). 3. உவமித்துப் பாடியாடும் கூத்தன். பண்ணிமை யடைத்த பலகட் பொருநர்" (கம்பரா. ஊர். 162).
பொருந்- பொருநை = பாறையொடு பொருது (மோதி) இறங்கி யோடும் (தாமிரபரணி) ஆறு. “குமரி பொன்னி வைகை பொருநைநன் னதிகள்” (குமர. பிர. மீனா. பிள். 11). ஒ.நோ: "கல்பொரு திறங்கும் மல்லற் பேரியாறு” (புறம். 132).
பொருநை - பொருநல் "பொருநல் வடகரை” (திவ். திருவாய். 6: 5:8).
பொருந்- (பொருத்து)- பொருந்தம் = பொருநை (பிங்.).
=
பொரு- பொருள் = 1. பொருந்திய உடமை. 2. பண்டம். 3. பொன் (சூடா.). 4. செல்வம். “பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின்” (நாலடி. 6). 5. சொத்து. 6. மதிக்கப்படுவது. 7. உருப்படி. 8. சொற்பொருள். 9 புலனம் (விஷயம்). 10. உவமியம் (உபமேயம்).
பொருள்- பொருட்டு = 1. (பெ.). கரணியம் (காரணம்) (பிங்.). 2. மதிப்பிற்குரியது. அதையொரு பொருட்டாகக் கொள்ளவில்லை (உ.வ.).
(கு.வி.எ.). 4. பயனோக்கி (நிமித்தம்). "வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள். 81).