உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

புல் (பருத்தற் கருத்துவேர்)

பொருந்தற் கருத்தினின்று பருத்தற் கருத்துப் பிறக்கும். பல பொருள்கள் ஒன்றுசேர்வதால் பருமை உண்டாகும். “சேரே திரட்சி” (தொல்.உரி.65).

புல் - பல் = பல. பல்காற் பறவை = வண்டு.

“பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்” (பெரும்பாண். 183). பல்கால் = பல சமையம், அடிக்கடி, "பல்காலுந் தோன்றி” (நாலடி.

27).

.

பல் பன்மை = 1. ஒன்றிற்கு மேற்பட்ட தொகைப் பருமை. "தானறி பொருள்வயிற் பன்மை கூறல்” (தொல். கிளவி. 23). 2. தொகுதி. ‘“உயிர்ப்பன்மை” (புறம். 19). 3. ஒரு தன்மைப்பட் டிராமை. “பன்மையே பேசும் படிறன் றன்னை” (தேவா. 674 :5). 4. குறிப்பின்மை. பன்மையாகவே பேசினான் (உ.வ.) (W.)

-

பல் - பல்லம் = ஒரு பேரெண் (திவா.). பல் = மிகுந்த. பல்வலிப் பறவை = சரபம். “பல்வலிப் பறவை பற்றுபு” (பெருங். இலாவாண. 11 :54). பல்லம் - பல்லவம் = பலமுறை பாடப்படும் கீர்த்தனை யுறுப்பு(W.).

பல்லவம்- பல்லவி = திரும்பத் திரும்பப் பலமுறை பாடப்படும் கீர்த்தனை முதலுறுப்பு. க. பல்லவி.

பல் - பல்லக்கு = சிவிகையினும் பெரிய (தூக்கிச் செல்லும்) ஊர்தி. “தந்தப் பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி” (தொண்டை. சத. 87). சிவிகை (சிறுத்தது)x பல்லக்கு. சிவிந்த பழம் என்னும் வழக்கை நோக்குக.

ம. பல்லக்கு, க. பல்லக்கி, பிரா. பல்லங்க்க, ச.பர்யங்க்க.

.