உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள்' (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்துவேர்)

66

137

வழிநடை முடிதல். "வழிநடப்ப தென்று விடியுமெமக் கெங்கோவே (தனிப்பா. 1. 212:5).

விடி = விடிகாலை. “விடிபக லிரவென் றறிவரிதாய்" (திவ். பெரியதி. 4:10:8).

விடிகாலை = விடிகின்ற நேரம்

விடி-விடியல் = விடிகாலை. "வைகுறு விடியன் மருதம்" (தொல். விடிகாலை."வைகுறு அகத்.8).

விடியங்காட்டி= விடிகாலை. தம்பி இன்று விடியங்காட்டி வந்தான் (உ. வ.) 'காட்டில்' என்பது ஓர் உறழ்தர வுருபு (Sign of comparative degree) அது உலக வழக்கிற் காட்டி என்று திரிந்து, காலப்பொருளில் வழங்கும் போது உறழ்தரத்தை மட்டுமன்றி ஒப்புத்தரத்தையும் (Positve degree) குறிக்கும்.

இனி, விடியல்காட்டி-விடியங்காட்டி என்று கொள்ளவும் இடமுண்டு. இதில், 'காட்டி' என்பது உறழ்தர வுருபல்லாத இறந்தகால வினை யெச்சம்.

ம்

'காட்டில்' என்னும் உறழ்தர வுருபு 'காட்டிலும்' என்று 'உம் ஏற்கவுஞ் செய்யும். அது உலக வழக்கில் 'காட்டியும்' என்று திரியும்.

விடியற்கருக்கல் = (விடியும் பொழுதுள்ள இருட்டு), விடியற் காலம், விடியா மூஞ்சி,விடியா வழக்கு, விடியா விளக்கு (நந்தா விளக்கு), “விடியா விளக்கென்று மேவிநின் றேனே" (திருமந். 48). விடியா வீடு, விடிவிளக்கு (விடியும்வரை எரிவது), விடிவெள்ளி, விடிவேளை என்பன பெருவழக்கான கூட்டுச்சொற்கள்.

விடி-விடிவு = 1. விடிகாலை. விடபியிதன்கண் விடிவளவு மிருவே மிருத்தும் (சேதுபு.தரும.13). 2. துன்பம் நீங்கி யின்பம் வருகை. “நிற்பயம் பாடி விடிவுற் றேமாக்க" (பரிபா. 7:85). 3. ஒழிவு வேளை.

க.பிடவு(b)

விடி - விடிவை = விடியற்காலம். விடிவை சங்கொலிக்கும்" (திவ். திருவாய். 6:1:9).

விடியவிடிய = இராமுழுதும்.

விள்-வெள். வெள்ளெனல்

=

காட்டி-வெள்ளங்காட்டி

விடியற்காலையில். ஒ.நோ: விடியங்காட்டி.

வெள்ளென = விடிந்தவுடன். நாளை வெள்ளென வா (உ.வ.).

வெள்-வெளு. வெளுத்தல் = 1. வெற்றிலை மென்றபின் உதடு சிவந்து

தோன்றுதல். 2. உண்மை வெளிப்படுதல். 3. புகழ் விளங்குதல்.