உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

வேர்ச்சொற் கட்டுரைகள்

771). "முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க” (தனிப்பா.). 4 அண்ணன். “அறுமுகேசன்முன்" (திருவாலவா. காப்பு. 2). 5. பழமை.

முன்சொல்(பிங்.) = பழமொழி.

ம., க. முண், தெ. முனு.

முன்-முன்னம். “நம்மினு முன்ன முணர்ந்த வளை” (குறள். 1277).

க. முன்னம்.

முன்னம் -முன்னர்.

(குறள். 435)

முன் -முன்னை

66

வருமுன்னர்க்

காவாதான் வாழ்க்கை"

= 1. பழமை. "முன்னைப் பழம் பொருட்கும்" (திருவாச. 7 : 9). 2. அக்கை. “என்ற னன்னை நும்முன்னை" (கம்பரா. மிதிலைக். 124). 3. ÄT OUT OUT. (FOLUIT.).

முன்னே-ம., க. முன்னெ.

முன்னன் = அண்ணன். “பெட்பொடு முன்னனைக் காணும்" (இரகு. அவதாரநீங். 13).

முன்னவன் = 1. தேவன். "முன்னவன் போதியில்" (மணிமே. 28 : 141). 2. சிவபிரான். “முன்னவன் கூடல்" (கல்லா. 32 : 10). 3. அண்ணன். “முன்னவன் வினவ" (கம்பரா. வேள். 4).

முன்னவள் = அக்கை (பிங்.). 2. மூதேவி. "முன்னவள் பதாகையோடு..... வற்துற்ற வாபோல்" (கந்தபு. சிங்கமு. 443).

முன்னோன் = 1. கடவுள். "முன்னோன் காண்க" (திருவாச. 3 : 29).2. குல முன்னைத் தலைவன். "தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன்” (மணிமே. 28 : 123-4). 3. தந்தை. “வாட்குடியின் முன்னோனது நிலை" (பு.வெ. 3 : 13, கொளு). 4. அண்ணன். “தம்முன்னோர் தந்தை தாய்" (பு.வெ. 9 : 33).

முன்னுதல் = 1. எதிர்ப்படுதல். “கதிர்முலைக் கன்னி மார்ப முன்னினர் முயங்கி னல்லால்" (சீவக. 483). 2. முற்படுதல். "முன்னியாடு பின்யான் உங்ஙனே வந்து தோன்றுவனே" (திருக்கோ. 16).

முன்தானை-முன்றானை = சேலைக் கடைமுனை. "முன்றானையிலே முடிந்தாளலாம்படி” (ஈடு, 1: 10 : 11).

முன் - முன்பு

=

(பெ.) 1. முன்னிடம். "தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும்" (புறம். 14). 2. முற்காலம். 3. பழமை (கு.வி.எ.).

முன்-முனி = நுனி.

முன்-முனை = 1. முன். “அத்தி னகரம் அகரமுனை யில்லை" (தொல். புண. 23). 2. நுனி. "வெய்ய முனைத்தண்டு" (சீவக. 1136, பாட வேறுபாடு). 3. கூர்மை. 4. கடலுட் செல்லும் நீண்டு கூரிய நிலப்பகுதி. 5. முகம் (ஈடு, 10 : 5 : 10), 6. தலைமை (அக. நி.).