உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்2 (முன்மைக் கருத்துவேர்)

முந்தூழ் = பழவினை (W.).

13

முந்து-முது-முதல் = 1. தொடக்கம் (ஆதி). “முதலூழி யிறுதிக்கண்” (சிலப். 8 : 1, உரை) 2. முதலிலிருப்பது. “முதல்நீ டும்மே” (தொல். எழுத்து. 458). 3. கரணியம் (காரணம்). நோய்முத னாடி” (குறள். 948). 4 மூல கரணியனான கடவுள். “மூவா முதலாய் நிள்ற முதல்வா" (திருவாச. 27 : 10). 5. முதலானவன். “முதலாய நல்லா னருளல்லால்" (திவ். இயற். 1: 5). 6. தலைமை வரிசை. முதன் மாணாக்கன். 7. அடைகொளி (விசேடியம்) (சைவப்). 8. மூலவைப்பு. "முதலிலார்க் கூதிய மில்லை” (குறள். 449). 9. வேர். "முதலி னூட்டுநீர்” (அரிச். பு. மீட்சி. 17). 10. கிழங்கு. 11. அடிப்பாகம். “வாடிய வள்ளி முதலரிந் தற்று" (குறள். 1304). 12. அடிமரம். “வேங்கையைக் கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை” (கலித். 38). 13. இடம். “சுரன்முதன் மராத்த வரிநிழல்” (சிறுபாண். 8). 14. முதற்பொருள். "முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப”. (தொல். அகத். 4). 15. பிண்டப் பொருள். "முதலுஞ் சினையும்” (தொல். வேற்றுமை. 6). 16. செலவுக்காகச் சேமிக்கும் பொருள். "திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும்” (S.I.I.III, 215 : 11). 17. இசைப்பாட்டு வகை (சிலப். 3 : 41-2, உரை). 18. வணிகப் பண்டக் கொள்விலை. 19. முதலெழுத்து, “எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே” (நன். 58).

(கு. பெ. எ. ) முதலான. முதலாயிரம்.

(கு. வி. எ. ) 1. முதலில். முதல்வந்தவன். 2. கூட. தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது (உ. வ. )

(இ. சொ.) 1. 5ஆம் வே. உருபு, அடிமுதல் முடிவரை (உ. வ.) 2. 7ஆம் வே. உருபு. “குணமுதற் றோன்றிய... மதியின்” (மதுரைக். 195). க. முதல்.

முதலுதல் = (செ. கு. வி.) 1. முதலாதல். "முதலா வேன தம்பெயர் முதலும்” (தொல். மொழி. 33. ) 2. தொடக்கமுடைய தாதல். "மூவா முதலா வுலகம்” (சீவக. 1).

(செ. குன்றாவி.) முதலாகக் கொண்டிருத்தல். அகர முதல் வெழுத்தெல்லாம்” (குறள். 1.).

முதல்வன் = 1. தலைவன். "மூவர்க்கு முதல்வ ரானார்" (தேவா. 453 : 2). 2. கடவுள். “ஞாலமூன் றடித்தாய முதல்வன்" (கலித். 124). 3. அரசன். (திவா.). 4. தந்தை. “தன்முதல்வன் பெரும்பெயர்" (கலித். 75).

=

முதலவன் குலமுதல்வன். “முதலவன் முதலிய முந்தையோர்” (கம்பரா. பள்ளிபடை. 50).

=

,

முதலோன் கடவுள். "செஞ்சடை முதலோன்' (கம்பரா. நிகும்

பலை.142).

முதலி = 1. தலைவன். "எங்கள் முன்பெரு முதலி யல்லை யோவென" (பெரியபு. கண்ணப். 177). 2. பெரியோன். "மூவர் முதலிகளுந் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்” (ஏகாம்.