26
வேர்ச்சொற் கட்டுரைகள்
மெழுகுத்திரி = மெழுகு திரி.
மெழுகுத்துணி = மெழுக்குத் துணி.
மெழுகு பதம் = காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகு போல் திரண்டுவரும் பதம்.
மெழுகு பனையன் = அம்மைநோய் வகை (யாழ். அக.)
மெழுகு பாகல் = பாகல்வகை (மூ.அ.)
மெழுகு பாளம் = மெழுகு தகடு.
மெழுகு பீர்க்கு = பீர்க்குவகை (உ.வ.).
மெழுகு பூச்சு = படிமைமேல் மெழுகு பூசியெடுக்கும் அச்சு.
=
மெழுகு பொம்மை 1. மெழுகினாற் செய்த விளையாட்டுப் படிமை. 2. மெய்வருத்தந் தாங்கமுடியாதவ-ன்-ள்.
௧. மேனதுபொம்பெ (b.).
மெழுகு போடுதல் = மரப்பண்டங்கட்குப் பளபளப்பேற்ற மெழுகைக் காய்ச்சிப் பூசுதல் (W.).
மெழுகுமண் = கருக்கட்டும் பசைமண் (W.).
மெழுகு முட்டம் = மெழுகு பாளம் (இடவழக்கு).
மெழுகெண்ணெய் = மரப்பண்டங்கட்கு மெருகிட உதவும் மெழுகு சேர்த்த பூச்செண்ணெய் (இ.வ.)
மெழுகெழுதுதல்=துணியில் அச்சடிக்க மெழுகால் உருவமெழுதுதல்
(2.61.).
கவனிப்பு:
ல ள ழ என்னும் மூன்று இனவொலிகளுள், முந்தியது லகரமே. ‘ல’ திரண்டு ளகரமும், 'ள' திரண்டு ழகரமும் ஆகும்.
எ-டு: கால்-காள்-காழ் (கருமை).
லகரம் நேரடியாய் ழகரமாவது முண்டு.
எ-டு: மால்-மழை.
இனி, இத்தகைய சொற்றிரிவுகளில், இடைப்பட்ட ளகரச்சொல் இறந்துபட்ட தெனினுமாம்.