உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒ.நோ: L. luna, moon. L. lunaticus-E. lunatic, insane person. E. lunacy, insanity.

பண்டைக் காலத்தில், நிலவொளியாற் கோட்டியுண்டாவதாக ஒரு கருத்து உலக முழுதும் பரவியிருந்தது.

"

மது-மதம் = 1. கள்(மது). 2. மதுக்களிப்பு (மலைபடு. 173, உரை). 3. தேன்.. "மதங்கமழ் கோதை" (சீவக. 2584). 4.வெறி (சங். அக.) 5. மகிழ்ச்சி. "காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம்" (நான்மணி. 7). 6. செருக்கு. "போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப்" (பரிபா. 18 1). 7. வலிமை. “படிமதஞ் சாம்ப வொதுங்கி” (பரிபா. 4:18). 8. காம வேட்கைமிகுதி (திருக்கோ. 69,உரை). 9. யானைக்கடம், மதநீர் (சீவக. 2485). 10. நிலவளம் (W.) 11. காசறை (கஸ்தூரி) நறுமை. "மாலையுஞ் சாந்து மதமு மிழைகளும்" (பரிபா. 10 92). 12. கன்மதம். (தைலவ. தைல, 125). 13. வீரியம் (யாழ். அக.) 14. மிகுதி (யாழ் அக.). 15. பெருமை (யாழ். அக.)

மது-மதுகை=1. வலிமை. “அனைமதுகையர் கொல்" (குறுந். 290) 2.அறிவு. "வானுயர் மதுகை வாட்டும்" (சீவக. 664).

மது-மதுங்கு.

மதுங்குதல் = இனிமையாதல்.

"மதுங்கிய வார்கனி”.

=

66

(திருமந்.2914

மதம் மதன் 1. கலக்கம் (யாழ். அக.). 2. மடமை. "மதனுடை நோன்றாள்" (திருமுருகு. 7, உரை). 3. செருக்கு "மதனுடை நோன்றாள்" (பட்டினப் 278). 4. வலிமை, “மதனுடை முழவுத்தோள்" (புறம். 50). 5. மன வெழுச்சி. “மதனுடை நோன்றாள் (புறம். 75). 6. அழகு (பிங்.) 7. மாட்சிமை (பிங்.) 8. மிகுதி (யாழ். அக.).

மதன்-மதனம் = 1. தேனீ (யாழ். அக.). 2. தேன்மெழுகு (யாழ். அக.). 3. மருக்காரை (மலை.). 4. பெருமிதம் (யாழ். அக.). 5. காமம் (பிங்.). 6. புணர்ச்சி விருப்பம் (பிங்.). 7. இளவேனில் (யாழ். அக.). 8. ஒரு சாம்பல் நிறக் கடல்மீன். 9. ஒரு வெண்ணிறக் கடல்மீன்.

மதம் - மதர். மதர்த்தல் = 1. களித்தல். "மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம்” (கம்பரா. நாட்டுப். 24.) 2. மதங்கொள்ளுதல். "மதர் விடையிற் சீறி” (பு. வெ. 714). 3. செருக்குதல் (W.) 4. மரஞ்செடிகள் மட்டிற்கு மிஞ்சிக் கொழுத்தல். 5. செழித்தல். 6. மிகுதல். "மதரரி மழைக்கண்" (சீவக.

2803).

மதர் = 1. யானை மதநீர் (நாமதீப. 207). 2. செருக்கு. "அரிமதர் மழைக் கண்ணீர்” (கலித். 77). 3. மகிழ்ச்சி (திவா.). 4. மிகுதி (பிங்.). 5. வீரம் (அரு.நி.)

மதர் - மதர்வு. 1. ஆசைப் பெருக்கம் (யாழ். அக.). 2. உள்ளக்களிப்பு (பிங்.). 3. இறுமாப்பு. 4. வலிமை (சூடா.). 5. செழிப்பு. 6. அழகு (சூடா.) 7. மிகுதி (திவா.)