உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

6. நூலும் செய்யுளும்

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

நெயவு நூலுக்கும் அறிவு நூலுக்கும் பல பெயர்கள் பொதுவாக வுள்ளன. இரண்டும் நூற்பெயர் பெற்றமைக்குக் காரணத்தை,

66

பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்

செஞ்சொற் புலவனே செயிழையா - எஞ்சாத

கையேவா யாகக் கதிரே மதியாக

மையிலா நூல்முடியு மாறு”

(நன். 24)

எனவும்,

உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்

(நன். 25)

புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு”

எனவும், உன்னித்துக் கூறினார் பவணந்தியார்.

பெயர்.

பருத்தி நூலுக்கும் அறிவு நூலுக்கும் பனுவல் என்பதும் பொதுப்

இழைபு என்றொரு நூல்வகையின் இலக்கணம் தொல்காப் பியத்தில்,

ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது

குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து

ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகின்

இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்" (தொல். பொருள். 554) எனக் கூறப்பட்டுள்ளது. இழைபு என்னும் பெயர் நூலை அல்லது இழைத்தலைக் குறிக்கும் இழை என்னும் சொல்லடியாய்ப் பிறந்ததாகும்.

பா என்பது, நெயவுப்பாவிற்கும் செய்யுட்பாவிற்கும் பொதுப் பெயர்.6

இங்ஙனம் நூலும் நெயவும்பற்றிய சொற்கள் அறிவுநூலையும் செய்யுட்பாவையும் குறிக்க வருதலால், நெயவுத் தொழிலுக்கும் செய்யுள் தொழிலுக்கும் யாதேனும் ஒப்புமையுண்மை பெறப்படும்.

6. ஆங்கிலத்திலும் நூற்பொருளைக் குறித்தற்கு நெசவுத் தொழிலினின்று விஷ்ஐலு, பீநியூற் என்னும் இருசொற்கள் எடுத்தாளப் பெறுகின்றன. (E. Text from L. Texre, weave.) நூல் மடியைக் குறிக்கும் Yawn என்னும் சொல், ஓசுநர் (Sailors) கூறும் கதைக்குப் பொதுப்பெயராகும். அதை Sailor's yawn என்பர்.