உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரலாற்றுச் சொற்கள்

23

வணக்கத்தின்பின் தெய்வ வணக்கம் தோன்றியதினால் அரச மனைப் பெயர் தெய்வமனைப் பெயராயிற்று.

இறை அல்லது இறைவன் என்பது, அரசனுக்கும் கடவுட்கும் பொதுப்பெயர். கடவுள் எங்கும் தங்கியிருப்பதுபோல, அரசனுடைய ஆணை, அவனுடைய நாடெங்கும் தங்கியிருக்கிறது என்பது கருத்து. இறுத்தல் தங்குதல்.

கடவுள் பெயர்க்கும் அவரொடு தொடர்புள்ள பொருட் பெயர்க்கும் திரு என்னும் முன்னொட்டுச் சேர்க்கப்படுவது போன்றே அரசனுடைய பெயர்க்கும் அவனொடு தொடர்புள்ள பொருட் பெயர்க்கும் சேர்க்கப்படும். எ-டு: திருவாய்க்கேள்வி, திருமந்திர வோலை.

8. தண்டனைவகை

‘அட்டைக்குழி', 'இருளுலகம்', ‘அளறு என நரகிற்குப் பெயரிருப்பதால், அட்டையிட்ட குழியிலும் இருட்டறையிலும் உளையிலும் பண்டைக்காலத்தில் குற்றவாளிகள் தள்ளப்பட்டனர் என்பது வெளியாகும்.

'அலமரல்', 'தெருமரல்', 'உழலுதல்' என்னுஞ் சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும்.

“அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி”

என்பது தொல்காப்பியம்.

(உரியியல்,14)

‘புள்ளிக்காரன்', 'முகத்தில் கரியைப் பூசுதல்', 'கரிக்கோ டிடுதல்' முதலிய வழக்குகள், ஊர்க்கு மாறான குற்றவாளிகளை ஊரார் செம்புள்ளி கரும்புள்ளி குத்தியும், முகத்தில் கரியைப் பூசியும், கரிக்கோடிட்டும் அவமானப்படுத்தியதை நினைவுறுத்தும்.

‘புல்லார்தல்',

'குதிரையேறுதல்' என்னும் வழக்குகளால், மற்போரில் தோற்றுப்போனவன் சிறிது புல்லைத் தின்ன வேண்டு மென்றும், அதோடு வென்றவனைக் குறிப்பிட்ட இடம் அல்லது கால எல்லைவரையும் சுமக்கவேண்டுமென்றும் இருந்ததாகத் தெரிய வருகின்றது.

'கண்ணைத் தோண்டிவிடுவேன்”, "மூளையை றிஞ்சி விடுவேன்", "தோலை உரித்துவிடுவேன்

"ஈரலைத் தின்று