உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

சிலர் பிறப்பு இறப்பு என்னும் சொற்கள், முறையே, பகரமெய்ச் சேர்க்கையும் அதன் நீக்கமும் பெற்றிருப்பதால், உயிர் உடம்பொடு கூடுதலையும் அதைவிட்டு நீங்குதலையும் குறிக்கு மென்று கூறுவர். பிறப்பு என்பது 'பிள்' என்னும் வேரினின்றும், இறப்பு என்பது ‘இறு’ என்னும் வேரினின்றும் பிறந்திருப்பதாலும், பிணங்கு இணங்கு எனப் பிற வெதிர்ச்சொற்களும் பிறப்பு இறப்பு என்பவை போன்றே யமைந்திருப்பதாலும், அது போலிக் கூற்றென்க.

2. இலக்கணக் குறியீடு

எழுத்துகளில், வேறோர் எழுத்தின் உதவியின்றித் தானே ஒலிக்கும் உயிரெழுத்து தானாய் இயங்கும் உயிரையும், உயிரெழுத்தின் உதவியின்றித் தனித்தொலியாக மெய்யெழுத்து உயிரின்றி இயங்காத உடம்பையும், உயிரோடு கூடிய மெய்யெழுத்து உயிரோடு கூடிய உடம்பையும் ஒக்கிருத்தலால், அம் மூவகை எழுத்திற்கும் அம் மூவகைப் பொருட்பெயர்களையே உவமையாகு பெயராக இட்டனர் முதனூலாசிரியர்.

உயிரெழுத்துகளில், குறில் நெடில் என்பன குறுவாழ்க்கை யுயிரையும் நெடுவாழ்க்கை யுயிரையும் மெய்யெழுத்துகளில், வல்லினம் மெல்லினம் இடையினம் என்பன வல்லுடம்பையும் மெல்லுடம்பையும் இடைத்தரவுடம்பையும், நிகர்க்கும் என்பதை, அவ்வப் பெயர்களே

உணர்த்தும்.

இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்புதல் முறையில், பகுத்தறிவுள்ள உயிர்களைக் குறிக்கும் சொற்களை உயர்திணை என்றும், பகுத்தறிவில்லாத பொருள்களைக் குறிக்கும் சொற்களை அஃறிணை யென்றும் வகுத்தனர் முதனூலாசிரியர்.

பெயர் வினை உடை உரி என்னும் நால்வகைச் சொற்களுள், முதலிரண்டே தலைமையானவை. பெயர் என்பது ஆளையும், வினை என்பது ஆளின் செயலையும் குறிப்பன.

பெயர்ச்சொற்கள் ஏழு வேற்றுமை யடைவதும், இறுதியில் விளிவேற்றுமையாவதும்; உயிர்கள் அல்லது ஆன்மாக்கள் எழுபிறவி கொள்வதும் இறுதியில் இறைவனால் அழைக்கப்பெறுவதும் போல்வன.

பெயர் என்னும் சொல், முதலாவது, ஓர் ஆளை விளித்தற்கோ ஒரு பொருளைச் சுட்டுதற்கோ இடப்பட்ட சொல்லைப் பொதுப்படக்