உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

பலபொரு ளொருசொற்கள்

'பலபொரு ளொருசொல்' என்பது

ஒருபொருட் பலசொல்லுக்கு எதிராகும். 'வேழம்' என்பது, கரும்பு மூங்கில் யானை எனப் பலபொருள் தருதலின் பலபொரு ளொருசொல்லாம்.

பலபொரு ளொருசொற்கள் இருவகை நிலையில் ஏற்படுவதுண்டு. ஒன்று பல பொருட்கும் சிறப்புச் சொல் உண்டாயிருப்பது; இன்னொன்று அவை யில்லாதிருப்பது. கரும்பு மூங்கில் யானை என்னும் மூன்று சொல்லும் இருக்கும்போது, அவற்றுக்குப் பொதுவாக வேழம் என்னும் சொல் தோன்றுவது சிறப்புச் சொல் உள்ள நிலை; அம் மூன்றும் இல்லாதபோது அது தோன்றுவது சிறப்புச் சொல் இல்லா நிலை; இவற்றுள், முன்னது மொழியின் பண்பாட்டையும், பின்னது அஃதின்மையையும் உணர்த்தும்.

முதலாவது ஒருபொருட்கு ஒரு சொல் ஏற்பட்ட பின்னரே அதன் நுண்ணியல்புகளையெல்லாம் குறிக்கும் ஒருபொருட் பலசொற்கள் ஏற்படுதலின், ஒருபொருட் பலசொற்கள் மலிந்துள்ள மொழிகளி லெல்லாம் மொழிப் பண்பாட்டை யுணர்த்தும் பலபொரு ளொருசொற்களே காணமுடியும். தமிழ் ஒருபொருட் பலசொன் மலிந்த மொழியாதலின், ஏற்கெனவே தனித்தனி சொற்பெற்றுள்ள பல்வேறு பொருள்களை இனத்தன்மையும் ஒப்புமையும்பற்றித் தொகுத்துச் சுட்டும் பலபொரு ளொருசொற்களே கொண்டுள்ளது.

பலபொரு ளொருசொற்கள், (1) உண்மை (2) போலி என இருதிறப்படும். இனத்தன்மையும் ஒப்புமையும் தொடர்பும்பற்றிப் பல்வேறு பொருள்களைத் தொகுத்துச் சுட்டும் பலபொரு ளொருசொல் உண்மையானதாம்.

எ டு : கேழல் என்பது, பன்றியையும் அதற்கினமான யானையையும் குறிப்பது; வாரணம் என்பது, நெடுங்கடலையும்