உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

மறை (வேதம்)

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

மழம், மறம் (வீரம்), மழவன் அல்லது மறவன் (வீரன்)

மன்பதை (Mankind)

மீகாமன், மீகான், நீகான் (மாலுமி)

மெய்ப்பாடு (பாவம்)

மெய்ப்பித்தல் (ருசுப்படுத்தல்)

வடக்கிருத்தல் (மானங்கெட வருமிடத்து உண்மை நோன் பிருந்து

உயிர் துறத்தல்)

வலவன் (சாரதி)

வழக்காரம் (பிராது)

வழிபடுதல் (ஆராதித்தல்)

வழுவாய் (பாவம்)

வாய்வாளாமை (மௌனம்)

வியப்பு (ஆச்சரியம்)

விலங்கு (மிருகம்)

விறல் (சத்துவம்)

விசி (Bench)

வேளாண்மை (உபசாரம்)

வீடு (மோக்ஷம்)

,

,

மேற்காட்டிய பொதுச் சொற்கள் போன்றே சாத்தன், கொற்றன், மருதன், ஆதன், பூதன், கீரன், பேகன், பாரி, காரி, நள்ளி, குமணன், வெளியன், தித்தன், தம்பி, கம்பன், கூத்தன், கண்ணன், முருகன், புகழேந்தி, அடியார்க்குநல்லான், நச்சினார்க் கினியன், பரிமேலழகன், தோலாவழக்கன் முதலிய எண்ணிறந்த மக்கட் பெயர்களும் கயற்கண்ணி (மீனாக்ஷி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி), திருமகள் (லக்ஷ்மி) முதலிய பற்பல தெய்வப் பெயர்களும், பொருநை (தாம்பிரபரணி), தில்லை (சிதம்பரம்), மறைக்காடு (வேதாரணியம்), பழமலை அல்லது முதுகுன்றம் (விருத்தாசலம்) முதலிய பல இடப்பெயர்களும் வழக்கற்றுள்ளன.

விடாப்பிடி (வைராக்கியம்), தடுமம் அல்லது நீர்க்கோவை (ஜலதோஷம்), ஊக்கம் (உற்சாகம்), திருவிழா (உற்சவம்), விழிப்பு (ஜாக்கிரதை) முதலிய பல சொற்கள் வழக்கு வீழும் நிலையில் உள்ளன.