உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

நூற் சொற்களைப் பிறிதொரு நூலிலும் காண்பதரிது. திருவாசகம் இன்றில்லையேல், சாழல் தெள்ளேணம் முதலிய சொற்களை வேறெங்குக் காணமுடியும்? திருவாசகத்திலும் திருவாசகமான எத்துணை அருநூல்களும் பெருநூல்களும் இறந்துவிட்டன! அவற்றிலுள்ள முழுமணிச் சொற்களனைத்தும் பெரும்பாழ்க்கடலுள் மூழ்கினவே! தொல்காப்பியம் ஒன்றில்லாவிடின் இற்றைத் தமிழர் கதி என்னவாகும்? இவற்றை யெல்லாம் தீர எண்ணி, இறந்தன போக எஞ்சிய சொற்களையேனும் இற்றைத் தமிழர் இறவாது காப்பாராக.