உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

கட்டுரை வரைவியல்

6. கட்டுரைக் குறிப்புச் சட்டகங்கள் (Hints and Outline for Essays)

i. சிக்கனத்தின் நன்மை (The benefits of thrift):

வரையறை– அளவுகடந்த சிக்கனத்தால் ஒருவருக்கும் பயனின்மை செல்வமிருக்கும்போது பிறரது பிழைப்புக் கெடுமாறு செலவைச் சுருக்குதல் சிக்கனமின்மை - சிக்கனத்தின் நன்மைகள் : (1) ஒருவனது செல்வம் அவன் நாட்டிலேயே யிருந்து, அந்நாட்டின்கல்வி, அறம், போர் முதலியவற்றிற்குப் பயன்படல், (2) பிறருக் குதவல், (3) வருந்தா வாழ்க்கை, (4) மதிப்பு - சிக்கனம் ஒருவகைத் தன்னடக்கமாதலின், மறுமையில் நற்கதிக்கும் வழியாதல் - முடிவு.

குறிப்பு : வரையறை என்பது வரலா றொழிந்த எல்லாக் கட்டுரை கட்கும், முடிவு என்பது எல்லாக் கட்டுரைகட்கும் பொதுவாகும்.

ii. ஒரு தெருத் துன்ப நேர்ச்சி (A street accident)

ஓரிடத்திலிருந்து ஓர் இயங்கி (Motor)

கடுவேகமாய்ச் செல்லல்

புறப்படல்

அது

ஒரு தெரு மூலையில் மறைவாக மற்றொரு வண்டி (வேகமாய்) வரல் - இரண்டும் மோதல் - இரு வண்டிகட்கும் சேதம் -துரப்பார்(Driver) உள்ளிட்ட சிலருக்குப் படுகாயம் - காயப்பட்டவர்க்குக் கட்டு மருத்துவம் - நகரக் காவலர் உசாவல் (விசாரணை) - துரப்பாருக்குத் தண்டனை - மாநகர்களில் துன்ப நேர்ச்சி இயல்பாயினும் தக்க முற்காப்பினால் அதை மட்டுப்படுத்தல் - முடிவு.

குறிப்பு : இயங்கி (Motor), மிதிவண்டி (Cycle), இயங்கி, மிதிவண்டி, குதிரை வண்டி முதலாக வண்டிகள் பல வகைய. அவற்றுள் எந்த இரண்டேனும் பலவேனும் மோதிக் கொள்ளலாம். சில வேளைகளில் ஓர் இயங்கி தானே ஒன்றில் மோதிக் கொள்ளலாம்; அல்லது ஒரு பள்ளத்தில் விழலாம். மாணவர் ஒரு துன்ப நேர்ச்சியைத் தாமாகவே புனைந்தெழுது வதைவிட, உண்மையாய் நேர்ந்ததொன்றை யெழுதுவது மிகச் சிறந்ததாகும்.

iii. உடல் நலம் (சுகம்) பேணல் (The care of health)

வரையறை உடல் நலத்தின் முக்கியம்

-

-

அதைப் பேணும் முறைகள் : (1) உடம்பு, உணவு, காற்று, உடை, உறையுள் முதலிய வற்றைத் துப்புரவாய் வைத்துக் கொள்ளல், (2) ஒத்த உணவைப் பசித்தபின் உண்டல், (3) உடற்பயிற்சி, (4) உண்டல், உடற்பயிற்சி முதலியவற்றில் வேளை தவறாமை, (5) எதிலும் ஓர் அளவாயிருத்தல், (6) காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப ஊண் உடை முதலியவற்றை மாற்றிக்கொள்ளல், (7) நோயை முன்தடுத்தலும் முளையிற்