உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. தொடர் வகைகள்

1

தொடரியல் (Syntex)

சொற்கள், தனித்து நிற்பதும் தொடர்ந்து நிற்பதும்பற்றி, (1) தனிச்சொல், (2) தொடர்ச்சொல் என இருவகைப்படும். தொடர்ச்சொல் எனினும் சொற்றொடர் எனினும் ஒக்கும். எடுத்துக்காட்டு : கடவுள், துணை, செய்வார்

-―

தனிச்சொல்.

கடவுள்துணை, கடவுள் துணைசெய்வார் தொடர்ச்சொல்.

தொடர்ச்சொற்கள் அல்லது சொற்றொடர்கள், அவற்றில் அமைந்துள்ள சொற்களின் தொகைபற்றி, (1) இருசொற்றொடர், (2) பல்சொற்றொடர் என இருவகைப்படும்.

இரண்டே சொற்கள் சேர்ந்த தொடர் இருசொற்றொடர்; இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்த தொடர் பல் சொற்றொடர்.

-

எ-டு : பழனிமலை, முருகன் வருவான் இரு சொற்றொடர் அறஞ்செய விரும்பு.

தொல்காப்பியத்தைப் பல்காற் பயில்க. ஒழுக்கமற்றவன் உயர்திணையைச் சேர்ந்தவ னல்லன்.

99

பல்சொற்றொடர்

இருசொற்றொடர், புணர்ச்சொல் அல்லது புணர்மொழி எனவும் பெயர்பெறும்.

குறிப்பு : பெயரொடும் வினையொடும் சேர்ந்தன்றிக் தனித்துவராத பலவகை விகுதிகளும், வேற்றுமையுருபுகளும், ஆ ஏ ஓ உம் முதலிய இடைச்சொற்களும், ஈற்று வினாவெழுத்துகளும், சாரியைகளும், துணைவினைகளும், இவைபோன்ற பிறவும், சொற்களாக எண்ணப்பெறா.