உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

(18)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கூட்டுடைமையாட்சி (Socialism) நல்லதென்று முதலாளி கள் சொன்னால், அதற்கு மிகுந்த மதிப்புண்டு.

(19) தமிழ நாகரிகம் எகிபதிய நாகரிகத்திற்கும் முந்திய தென்று நான் உண்மையைச் சொல்லும்போது, தமிழரும் எள்ளி நகையாடுகின்றனர்.

(20) கடவுள் ஒருவரே

என்னும் உண்மையைப்

உணர்ந்திருந்தால், இவ்வளவு மதச்சண்டை இராது.

பலர்

(21) மூன்றாம் உலகப்போர் நெருங்கிவிட்டதென்று ஆசிரியர் கூறியது உனக்கு நினைவிருக்கிறதா?

(22) தண்டனை யச்சத்தினாலேயே கீழ்மக்கள் ஓரளவு திருந்திய வொழுக்கத்தினரா யிருக்கின்றனர் என்று வள்ளுவர் கூறுவது, முற்றும் உண்மையாகும்.

(23)

கொள்ளைக்காரருள்ளும் நல்லவருண்டென்று நான் சொல்வது, ஒருகால் உனக்கு வியப்பை விளைக்கலாம்.

(24) 'இனிமேல் நான் பொய் சொல்லமாட்டேன்' என்று நீ சொன்ன இடம் இதுவே.

(25) இயற்கைத் தெரிப்பு முறையால் உயிரினத் தோற்றம் (Origin of Species by means of Natural Selection) என்று டார்வின் கூறுவதை, பலர் இன்னும் சரியாய் அறியவில்லை.

7. வாக்கிய வகைகள்

வாக்கியங்கள் அமைப்புமுறைபற்றி, (1) தனி வாக்கியம் (Simple Sentence), (2) கூட்டு வாக்கியம் (Compound Sentence), (3) கலப்பு வாக்கியம் (Complex Sentence), (4) கதம்ப வாக்கியம் (Mixed Sentence) என நால்வகைப்படும்.

தனி வாக்கியம் (Simple Sentence)

ஒரே எழுவாயும் ஒரே முற்றுப் பயனிலையும் உள்ள வாக்கியம் தனி வாக்கியம்.

எ-டு: (1) மயில் ஆடுகிறது.

(2) ஒரு மயில் ஆடுகிறது.

(3) ஒரு மயில் சோலையில் ஆடுகிறது.

(4) ஓர் அழகான மயில் சோலையில் ஆடுகிறது.

(5) ஓர் அழகான மயில் சோலையில் தோகை விரித்தாடுகிறது.