உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறிவுப் பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறழ்ந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம்.

அன்பென்பது ஏசுவும் புத்தரும்போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம்.

223

ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத்தனத்திற்கு ஏதுவாகாது. ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று.

துறவு தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது.

இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும்.

கட்டுப்பாட்டில்லாவிடின் காவலனுங் காவானாதலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற் கேற்றதாம்.

பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும் அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும்....

கால் மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாம். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இருவகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம்.

ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடிவாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கையாம். இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக்காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் தமிழராகவே இருத்தல் வேண்டும்.

கருத்துவேறுபாட்டிற் கிடந்தந்து ஒரு சாராரை ஒருசாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம்.

இவ் வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை.

இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், னத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர்