உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

ix

முகவுரை

ஒரு மொழியின் பெருமை அம் மொழியிலுள்ள இலக்கிய இலக்கண நூல்களால் விளங்கும். நம் தமிழ்மொழியோ இலக்கண வரம்புச் சிறப் புடையது. பண்டைத் தமிழிக்கண நூல்களாகிய அகத்தியம், தொல்காப்பியம் என்னும் இவற்றிற்குப் பின், வடசொற்கள் மிகுதியும் தமிழ்மொழியில் விரவிய காலத்தெழுந்த நன்னூல் என்னும் இலக்கணமே பெரும்பாலும் பயிலப் பெறு வதாயிற்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்விச் சாலைகளிற் பயின்ற மாணவர் ஒருவாறு நன்னூலை நன்கு பயின்றவரே ஆவர். சென்ற கால் நூற்றாண்டாகத்தான் நன்னூற் பயிற்சி ஆங்கிலப் பள்ளிகளில் உரிய முறை யிற் காணப்பெறாத தாயிற்று. இதுபோது பள்ளியிறுதி வகுப்புத் தேர்வுப் பொறுப்புக் கூட்டத்தார் தாய்மொழிப் பயிற்சி மேம்பாட்டினைக் கருதி, நன் னூலில் மாணவர்க்கு இன்றியமையாது வேண்டப்படும் பகுதிகளை உரை நடை முறையில் அவ்வப் பகுதிகளை விளக்குதற்குரிய சூத்திரங்களுடன் கற் பிக்கப் பாடத்திட்டம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர்.

இத் திட்டத்தை ஒட்டி வெளிவந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இதில் வசதியும் எளிதுணர்வும்பற்றிப் புணரியல்களிலெல்லாம் இயற்கைப் புணர்ச்சி முன்னும், விகாரப் புணர்ச்சி பின்னுங் கூறப்படும்.

இந் நூல் விளங்க வைத்தல் என்னும் ஒரே நோக்கம்பற்றி எழுதப்பட்ட தென்பது இதனைப் பயில்வார் நன்குணர்வர்.

ஞா. தேவநேயப் பாவாணர்