உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கொள்ளுதல். பொரி விளங்காய் பிடித்தல் என்னும் வழக்கையும், "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது,” என்னும் பழமொழி யையும், நோக்குக.

பொருளிலக்கணம் பொருள்களை அகம்புறம் என இரண்டாக வகுத்து, கணவன் மனைவியர் காதலின் பத்தை அகம் எனச் சிறப்பித்து, மற்றெல்லாவற்றையும் புறத்துள் அடக்கும். புறத்துள் போர்த்துறை மிகச் சிறப்பாகக் கொள்ளப்பட்டு, மற்றவையெல்லாம் எழுபுறப் பொருள் திணை களுள் ஆறாவதான வாகைத் திணையுள் அடக்கப்பெறும். இவற்றின் விரிவை என் ‘தொல்காப்பிய விளக்கம்' என்னும் நூலுட் கண்டு கொள்க. உலக மொழிகளுள் தமிழ் மிகுந்த இலக்கண வரம்புள்ளது.

கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ"

என்று பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற் புராணம்) கூறுதல் காண்க. (2) மொழி நூல்

மொழி நூற்கு வித்தூன்றியவர் தமிழரே. தமிழ்ச் சொற்களை, இலக்கண வகைச் சொல் மூன்றும் பொருள்வகைச் சொல் ஒன்றும் சொற்பிறப்பியல் வகைச் சொல் மூன்றுமாக வகுத்திருந்தனர்.

" எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே."

" சொல்லெனப் படுப பெயரே வினைஎன்று

(தொல்.பெயர்.1)

ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே."

(தொல்.பெயர் 4)

66

இடைச் சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

(தொல். பெயர் 5)

அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப."

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் என மூன்றியலும் செய்யுள்

ஈட்டச்சொல்லே.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி."

66

அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை

(தொல்.எச்ச.4)

வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்

விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்

நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்

நாட்டல் வழிய என்மனார் புலவர்."

(தொல்.எச்ச 7)