உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பொது

2

பண்டைத் தமிழப் பண்பாடு

மேலை நாடுகளெல்லாம் நாகரிகமடைந்திருந்தாலும், அவற்றுள் ஆங்கில நாடே பண்பாட்டிற் சிறந்ததாகச் சொல்லப்படுவதுபோல், நாவலந் தேயத்திலும் தமிழ் நாடே நல்லதாகச் சொல்லப்பட்டது.

66

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து”

என்று, தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூறுதல் காண்க.

வடுகர் அருவாளர் வான்கரு நாடர்

சுடுகாடு பேய்எருமை என்றிவை யாறும்

குறுகார் அறிவுடையார்."

என்பது ஒரு பழஞ் செய்யுள் (தொல். சொல் 55. சேனா. உரை மேற்கோள்).

66

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல"

என்பதால் (புறம் 31), தமிழர் அறத்தையே எல்லாப் பேறுகட்கும் அடிப்படையாகக் கொண்டிருந்தனர் என்பது புலனாகும்.

மொழித்துறையில், அவர் நாகரிகம் அடைந்திருந்தது போன்று பண்பாடும் அடைந்திருந்தனர். ஒன்றிற்கு இரண்டிற்குப் போதல் என்றும் கால் கழுவுதல் என்றும் இடக்கரடக்கியும், இறந்தவனைத் துஞ்சினான் என்றும் சாவைப் பெரும் பிறிது என்றும் நல்ல பாம்பு கடித்தலைக் கொடித் தட்டல் என்றும் மங்கல வழக்காகவும், கூறிவந்தனர்.

பெரியோரைக் கை நீட்டிச் சுட்டாமலும், அவரை நோக்கிக் கால் நீட்டாமலும், அவர் நிற்க இருந்து கொண்டு பேசாமலும், அவரை நீங்கள் என்று முன்னிலைப் பெயராற்குறியாது தாங்கள் என்றும் அங்குற்றை என்றும் படர்க்கைச் சொல்லாற் குறித்தும், பணிவுடைமை காட்டி வந்தனர். பொதுவாக, இழிந்தோனை நீ என்றும், ஒத்தோனை நீர் என்றும். மூத்தோனை நீங்கள் என்றும், உயர்ந்தோனைத் தாங்கள் என்றும் துறவுமடத்