உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

பல்வேறு வகுப்பார் பண்பாடு

2. அந்தணர் பண்பாடு :

(1) ஐயரது:

மணப்பருவம் வந்தபின் ஆணும் பெண்ணும் தாமாகக் கூடி வாழ்ந்த முதற் காலத்தில், மணக்கவில்லை யென் று பொய் சொல்லியும், மணந்ததாக ஒப்புக்கொண்டவிடத்தும் கைவிட்டும், ஆடவர் பெண்டிர்க்குத் தீங்கு செய்து வந்ததால், அவை பெரும்பாலும் நேராவண்ணம், பலர்க்கு முன் உறுதி கூறி மணமகன் மணமகளை மணக்குமாறு, மக்கள் மீது அன்பும் அருளும் கொண்ட இராமலிங்க அடிகள் போலும் பெரியோர் கரணம் என்னும் திருமணச் சடங்கை ஏற்படுத்தினர்.

66

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப.”

(தொல். கற்.4)

அறியாமை எல்லாத் தீமைக்கும் வேராகையால் அதை அகற்றும் பொருட்டுப் பல துறைகளில் முதனூலை முனிவர் அருளிச் செய்தனர்.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்"

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”

(தொல். மர. 95)

என்று திருமூலர் (திருமந்திரம்,724) கூறியபடி, உடம்பாற் பெறக்கூடிய பயனை முற்றும் பெறுமாறு வாழ்நாளை நீட்டிக்கும் மருத்துவக் கலையை, சித்தர் கண்டு இல்லறத்தார்க் குதவி யருளினர்.

இறைவனுக்கு உண்மை அறிவு இன்பம் முதலிய பிற பண்புகளும் வடிவாகுமேனும், அன்பே சிறந்ததாகக் கண்டறிந்து இறைவனையடைய அதுவே வழியாகக் கூறியவர் நாவலந் தேயத்தில் தமிழ அந்தணரே.

அன்பும் சிவமும்இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும்அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும்அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

என்றார் திருமூலர் (திருமந்திரம், 270).

அன்பெனும் பிடியு ளகப்படு மலையே அன்பெனுங் குடிபுகும் அரசே